திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; திமுக தலைமையிலான கூட்டணியில், சட்டமன்ற தொகுதி பங்கீடுகுறித்து, திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை கட்சியின் மாநில செயலகக் குழு அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், எஸ்.டி.பி.ஐ கட்சியின்மாநில துணைத் தலைவர்கள் முகமது முபாரக், எஸ்.எம்.ரஃபீக் அகமது, மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில செயலாளர் அமீர் ஹம்சா ஆகியோர் இடம் பெறுவர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்