அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உரிமை போராட்டங்களை இழிவுபடுத்தும் பெப்சி நிறுவனத்தை கண்டிப்போம் - CFI

சமீபத்தில் பெப்சி குளிர்பான நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரப்படம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்த விளம்பரப்படத்தில் மாணவர்களின் உரிமைக்கான போராட்டம் ஒன்று நடப்பது போலவும் அதில் அந்த பிரச்சனைகள் தீர்க்கபடுவது வரை மாணவர்கள் உண்ணாமல் இருப்போம் என மாணவர் தலைவர் பேசுவதாகவும் ஆனால் போராட்டம் செய்யும் மாணவர்களில் ஒருவரே பேசிக்கொண்டிருக்கும்போது பெப்சி குடித்து அந்த போராட்டத்தை கேவலப்படுத்துவதாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

தங்களுடைய விஷம் கலக்கப்பட்ட கேவலமான குளிர்பானங்களை விளம்பரப்படுத்துவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் ஒரு மாணவர் போராட்டத்தை கொச்சை படுத்துவதன் மூலம் தங்களுடைய தினவெடுத்த ஏகாதிபத்திய திமிர்த்தனத்தை இத்தகைய பன்னாட்டு நிறுவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

நம்முடைய நாட்டிற்குள் கள்ளத்தனமான வழிமுறைகள் மூலம் கம்பெனிகளை திறந்து உள்நாட்டு விவசாயிகளின் ஜீவாதாரமான தண்ணீரை ஆயிரக்கணக்கான கொள்ளளவு தினமும் உரிஞ்சி விவசாயத்தை அழிக்கும் இத்தைகைய தேச விரோத கம்பெனிகளுக்கு எதிராக எப்பொழுதும் மாணவர்களே தீவிரமாக போராடி வருகின்றனர்.

எனவே அவர்கள் ஆழ்மனதில் இருக்கும் மாணவர்களுக்கெதிரான வெறுப்பை விளம்பரப்படங்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.மாணவர்களை இழிவுபடுத்துவது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, குழந்தைகளை ஆபாச அசைவுகளை காட்டச்செய்வது, பொய்களை சொல்வது, வரலாற்று சின்னங்களை தாங்கள் கட்டியதாக சொல்வது, மருத்துவர்களை வைத்து பொய் செய்தியை பரப்புவது போன்ற கேவலமான செயல்கள் மூலம் விளம்பரப்படங்களின் அத்துமீறல்கள் சமூகத்தில் பல்வேறு மோசமான கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருகின்றன. எனவே இந்த விளம்பரபடத்தை கண்டிப்பதோடு மாநில மற்றும் மத்திய அரசுகள் விளம்பரப்படங்களை நெறிப்படுத்துவதற்கு சிறப்பு குழு தொடங்கி இத்தகைய மோசமான விளம்பரப்படங்களை தடை செய்யுமாறும் அத்தகைய நிறுவங்களுக்கெதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (CFI) சார்பில் கேட்டுக்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு