ஜாமியத் உலமா-ஈ-ஹிந்த் (JUH)யின் தேசிய ஒருமைப்பாடு மாநாடு டில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்ளரங்க விளையாட்டு திடலில் சனிக்கிழமை (12-03-16) அன்று நடைபெற்றது.
ஜாமியத் உலமா-ஈ-ஹிந்தின் தேசிய தலைவர் மெளலானா சையத் அர்ஷத் மதானி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
மதானி, வலதுசாரி கட்சி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையாக இருப்பதால், சிறுபான்மையினர் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக உணர முடியவில்லை என்று கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், பிப்ரவரி 9 ஆம் தேதி தேச விரோதி என்ற பெயரில் கைது செய்யப்பட்ட JNU கல்லூர் மாணவர் உமர் காலித் அவர்களின் தந்தை SQR இல்யாஸ் கலந்துக் கொண்டார். சிறையில் வாடும் உமர் காலிதை விடுதலை செய்யப்படுவார் என்று ஜாமியத் உலமா-ஈ-ஹிந்த் அமைப்பினர் நம்பிக்கையளித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னால் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர், ஸ்ரீ கல்கி அறக்கட்டளையின் நிறுவனர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் ஜான் தயாள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்