அதிகம் படிக்கப்பட்ட பதிவு

எஸ்.டி.பி.ஐ 25 இடங்களில் தனித்து போட்டி

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திமுகவிடம் 12 தொகுதிகளின் பட்டியல் அளித்திருந்தோம். ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தவில்லை. இதனால் திமுக கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியது.

மேலும் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறினார்.

இக்கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் KKSM.தெஹலான் பாக்கவி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் S.M.ரபீக் அஹமது, நெல்லை முபாரக், அம்ஜத் பஷா,மாநில பொதுச்செயலாளர் B.அப்துல் ஹமீது, செயலாளர்கள் அமீர் ஹம்சா, G.அப்துல் சத்தார், I. உஸ்மான் கான், T.ரத்தினம் மற்றும் மாநில பொருளாளர் முஹைதீன் ஆகியோர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆகிய அனைவரும் முன்னிலை வகித்தனர்.

போட்டியிடும் தொகுதிகள்:

பாளையங்கோட்டை, கடையநல்லூர், மதுரை மத்தி, திருவாடனை, முதுகுளத்தூர், துறைமுகம், ராயபுரம், தாம்பரம், திரு.வி.க.நகர்(தனி), சிதம்பரம், வேலூர், ஓசூர், அறந்தாங்கி, பழனி, கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பட்டுகோட்டை, பாபநாசம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, கம்பம், மானாமதுரை, சங்கராபுரம், திருப்பூர் தெற்கு.

மேலும் 10 தொகுதியின் வேட்பாளர்கள்

1. துறைமுகம் S. அமீர் ஹம்ஸா மாநில செயலாளர்
2. திரு.வி.க.நகர் (தனி) புஸ்பராஜ் வட சென்னை மவட்ட செயலாளர்
3. கம்பம் S.M. ரபீக் அஹமத் மாநில துணை தலைவர்
4. வேலூர் ஹாஜி ஷேக் மீரான் வேலூர் மவட்ட வர்த்தகர் அணி தலைவர்
5. திருவாடனை ஷரீப் சேட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்
6. மதுரை மத்திய நஜ்மா மாநில மகளிரணி தலைவர்
7. ராயபுரம் கோல்டு ரபீக் ராயபுரம் தொகுதி தலைவர்
8. கடையநல்லூர் மெளலவி ஜாபர் அலி உஸ்மானி மாநில செயற்குழு உறுப்பினர்
9. பாளையங்கோட்டை மெளலவி சாஹுல் ஹமீத் உஸ்மானி நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர்
10. மானா மதுரை (தனி) காசிநாத துரை மாவட்ட செயர்குழு உறுப்பினர்,புதுக்கோட்டை.

மேலும் இதர தொகுதிகளில் பட்டியல் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு