வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் மண்டப்பத்தில் AIMIM கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் இன்று நடைபெற்றது. கூடத்திற்கு கட்சியின் மாநில பொது செயலாளர் டி.எஸ்.வக்கீல் அஹமத் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மசூத் கான், மாநில இணை செயலாளர் இம்தியாஸ், இனாயத்துல்லா, உயர்மட்ட குழு உறுப்பினர் அன்சர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஹெச். பர்வேஸ் அஹமத் அனைவரையும் வரவேற்றார்.
கூடத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் G.S.இக்பால் அஹமத் கலந்து கொண்டு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை சேப்பாக்கம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் AIMIM கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, வருகின்ற 9 ஆம் தேதி கட்சியின் தேசிய தலைவர் அசதுத்தீன் உவேசி வாணியம்பாடிக்கு வருகை தந்து அன்று நடைபெருள்ள பொது கூடத்தில் கலந்து கொண்டு வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் வக்கீல் அஹமத், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் முபாரக் பாஷா மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் அறிமுகம் செய்து பேசுவார்.
எங்கள் கட்சியில் தலித்துகள் பெரும்பான்மையாக உள்ளனர். எங்கள் உடைய நோக்கம் பதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களை காக்க வேண்டும். எங்கள் கட்சியில் லட்சியம் உள்ளது, லட்சங்கள் இல்லை, லட்சியத்தின் அடிப்படையில் செயல் படுவும், மக்களின் சேவைக்காக போரடுவும். ஓட்டுக்கு பணம் கொடுக்க இயலாது. ஆகையால் சேவை செய்ய மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் திருச்சி மண்டல தலைவர் முஹம்மத் தையுப்,பெரம்பலூர் மாவட்ட தலைவர் முஹம்மத் இப்ராஹீம், அரியலூர் மாவட்ட தலைவர் சபீல் அஹமத் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் இனாயத்துல்லா நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்