"உதவும் கரங்கள்" இது நீடூர் நெய்வாசல் பாவாநகர் உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவும் கரங்களாக மனதில் தவழ்கிறது இது மனிதநேய அடிப்படையில் அவர்களது அவசர கால தேவைகளை பூர்த்தி செய்யும் உதவும் கரங்கள் அவர்களுக்கு மருத்துவம், படிப்பு, தொழில் கல்வி, வாழ்வாதார உதவிகள் என பலதரபட்ட ஜனரட்சகமான மனிதநேய பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்ட அமைப்பு தான் "உதவும் கரங்கள்".
இதன் செயல்பாடுகள் கவுரவ ஆலோசகர்களின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் ஆலோசிக்கபட்டு மனநிரைவுடன் அதன் நிர்வாகிகள் செயல்படுத்துகிறார்கள். இதன் நோக்கம் எளியவர்களுக்கு உதவி இறைவன் பொருத்தத்தை பெறுவது, இதுவரை 60க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டு சிறப்பான சேவையை செய்துவருகிறது.
செயல்பாடுகள் :
* ஏழை எழிய மாணவர்களின் கல்விக்கு உதவுவது.
* ஏழை எழிய மாணவர்களின் கல்விதிறனை மேம்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டுசெல்வது.
* பொருளாதார குறைபாடுகளால் அவதிபடும் குடும்பத்தினற்கு உதவி தொகை அளிப்பது.
* ஏழை, எளிய குடும்பதினர்க்கு அவசிய / அவசர தேவையான மருத்துவ உதவிகள் செய்வது.
* ஏழை, நடுத்தர குடும்பதினரின் எதிர்பாராத விபத்து போன்ற பேரிடர்களில் முடிந்த உதவிகளை தந்து அவர்களின் மனபாரத்தை குறைப்பது.
* எளிய குடும்பத்தினரின் வாழ்வாதரத்தை பெருக்க உதவி / தொழில் கடன் வழங்குவது.
* ஆண்கள் இல்லாத குடும்பத்தினர்க்கு வாழ்வாதாரத்திற்காக தையல்/கைவினை போன்ற பயிற்சி அளித்து வருமானத்தை ஏற்படுத்தி தருவது.
* வருடாந்திர இலவச மருத்துசேவை (சேவை மையம் உதவியுடன்)
* இஸ்லாமிய கல்வியை ஊக்குவிக்க மதரஸாவில் படிப்பவர்களின் குடும்பத்திற்க்கு உதவி தொகை வழங்குவது (நீடூர்,நெய்வாசல்,பாவாநகர்)
* ரிஸ்வான் மதரஸாவில் பட்டம்பெறும் மாணவிகளுக்கு அன்பளிப்பு வழங்குவது.
* ரமலானில் ஃபித்ரா வினியோகம் மற்றும் பெருநாள் அன்பளிப்பு பொருட்கள் வழங்குவது.
* பெருநாள் தினங்களில் மார்க்க வினாடிவினா போட்டிகள் நடத்துவது.
* SSLC, +2 தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குவது.
மேற்கண்ட செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தபட்டுவருகிறது. இதன் நிர்வாகிகள்
தலைவர் : O.S.A.முஹம்மது புஹாரி
செயலாளர் : S.முஹம்மது நபீஸ்
பொருளாலர் : TSR.A.முஹம்மது ஆசிக்
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்