இன்று காலை இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹூம் அவர்கள், மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் வைகோ அவர்களையும், திருமாவளவன் அவர்களையும் கம்யூஸ்ட்டு தலைவர்களையும் சந்தித்து, வருகிற சட்டமற்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு என அறிவித்தார்.
சிறையில் உள்ள 49 முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை என்ற ஒற்றை கோரிக்கை ஏற்று, வாக்குறிதியை தந்த மக்கள் நல கூட்டணிக்கு எங்கள் ஆதரவு என்றார்.
மேலும், இஸ்லாமியர்களின் சார்பாக வாக்குகளை பெற்று மக்கள் நல கூட்டணியை வெற்றி பெற செய்வோம் என்று கூறினார்.
இச்சந்திப்பின் போது, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் ரசூல் மொய்தீன், தென் சென்னை மாவட்ட தலைவர் அப்ரோஸ் பாஷா,பாளையம் வாசிம், கம்பம் ரியாஸ், கொளத்தூர் பகுதி இளைஞர் அணி தலைவர் யூசூப், கம்பம் தன்வீர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்