அதிகம் படிக்கப்பட்ட பதிவு

நட்பியல்

        நட்பு ---- மிக அழகான உறவு ,ரொம்ப ஆழமான உறவு,நம்மை நாமாகவே இருக்க வைக்கும் உறவு.


       சில பேர்க்கு பெற்றோர் இல்லாமல் இருக்கலாம் ,சில பேர்க்கு உடன் பிறந்தவர்கள் இல்லாமல் இருக்கலாம்,சில பேர்க்கு சில உறவுகள் இல்லாமல் இருக்காலாம்.ஆனால் நண்பர்கள் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது.நம் வாழ்வில் நாம் ஏதோ ஒரு கால கட்டத்தில் எல்லா உறவுகளுக்காகவும்அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றார் போல்  நாம் மாற வேண்டி இருக்கும் . ஆனால் நாம் எப்பொழுதும் ஒரே மாதிரி  இருக்க அனுமதிப்பது நம் நட்பு வட்டம் மட்டும் தான்.



  அதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள நட்பானது மிகவும் ஆழமானது.நட்பில் என்ன ஆண் பெண் என்று கேட்கலாம்.வேறுபாடு நட்பில் இல்லை நம் சமூகம் அந்த நண்பர்களை பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உள்ளது.

 ஒரு ஆணுக்குள் இருக்கும் கம்பீரத்தை ஒரு பெண் ரசிக்கவும்,ஒரு பெண்ணுக்குள் இருக்கும் குழந்தை தனத்தை ஒரு ஆண் ரசிக்கவும் அவர்கள் காதலர்களாய் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.நண்பர்களாய் இருந்தாலே போதும்.


அப்பா-மகள்,அம்மா -மகன்,அண்ணன் -தங்கை,அக்கா-தம்பி என இந்த உறவுகளுக்குள் இருக்கும் அன்பு,பாசம்,நேசம்,பரிவு,அக்கறை,கண்டிப்பு என அனைத்தையும் தரும் உறவு  தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு.


 என் மீது அன்பு காட்டும் போது என் அம்மாவையும் ,அக்கறை எடுத்துகொள்ளும் போது என் அப்பாவையும் ,செல்லமாய் கோபித்து கொள்ளும் போது என் அக்காவையும்,நிச்சயமாய் என் நண்பன் நியாபகபடுத்துகிறான்.


ஆணாதிக்க சமூகத்தில் ஒரு ஆண் , ஒரு பெண்ணினுடைய  உணர்வுகளை புரிந்து கொள்ளவும் அதை மதிக்கவும் அவர்களுக்குள் இருக்கும் நட்பு வாய்ப்பு அளிக்கிறது.


ஊரில் உள்ள எல்லா பெண்களையும் site அடிக்கிற பையனா இருந்தாலும் அவனுடைய தோழி உலக அழகியாவே இருந்தாலும் ஒரு முறை கூட அவனின் பார்வை எல்லை மீறாது .அது தான்  நட்பின் கண்ணியம்.

என்னதான் தன் நண்பனை நாலு பேர் நாலு விதமா பேசினாலும் ,யாருக்காகவும் தன் தோழனை விட்டு கொடுத்து பேச மாட்டாள்.காரணம்  அவள் தன் நண்பனின் மீது வைத்து இருக்கும் நம்பிக்கை.

தன் தோழிக்காக தன் நண்பர்களிடம் சண்டையிடும் ஆணும்,தன் தோழனுக்காக தன் பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்யும் பெண்ணும் இருக்க  தான் செய்கிறார்கள்.

ஏன் என்னை இந்த கட்டுரை ஐ எழுத தூண்டியதுமே என் ஆண்  நண்பர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

என்ன தான் நாம் இதில் உள்ள அழகியலை எடுத்து சொன்னாலும்,இன்னமும் ஆணும் பெண்ணும் பேசினாலே அவர்களை காதலர்களாய் பார்க்கும் இந்த சமூகம் தன் பார்வையை மாற்றி கொள்ளவே இல்லை. அதற்கு சாட்சி பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள கூட கூடாது எனும் சட்டமே போதும்.


ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமே என போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்களே இப்படி இருந்தால் அந்த சமூகமும் அப்படியே தானே  இருக்கும்!!!!!

சமீபத்தில் தான்  உலகம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டங்கள் கோலாகலமாய் அரங்கேறியது.அன்றைய தினம் பெண்களை புகழ்ந்து புகழ்ந்து பேசிய பலரும் ஒரு பெண் தன்  நண்பனுடன் பேசி கொண்டு இருப்பதை பார்த்தால்  அவர்களை காதலர்களாக பார்ப்பவர்களாய் தான் இருப்பார்கள்.


முதலில்ஆணையும் பெண்ணையும் வெறும் சதையும் பிண்டமுமாய் பார்க்காமல் அவர்களை உயிரும் உணர்வும் உள்ள மனிதர்களாய் பார்க்கும் எண்ணம் வளர வேண்டும்.அதை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும்   உணர  வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இன்றைய சமூகம்.


பேசினாலே கற்பு போய்விடும் என்று தவறாய் எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் , நட்புக்கும் கற்பு உள்ளது என்பதை என்றைக்கும் அறியபோவது இல்லை.


என்றைக்கு ஆணையும்,  பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் எண்ணம்  அழிகிறதோ  அன்றைக்கு தான்  இந்த சமூகம் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

நட்பை ஆராதிப்போம்,நண்பர்களையும்,நட்பையும் மதிக்க கற்று  கொள்வோம்.
                                      Image result for friends

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு