அதிகம் படிக்கப்பட்ட பதிவு

விசிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலை தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி அமைத்து சந்திக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 11 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

வேட்பாளர்கள் பட்டியலில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் குன்னம் தொகுதியிலும் மற்றும் விசிக மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வேலூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேலும் புதுச்சேரியில் 7 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. தற்போது இரண்டு தொகுதிகளின் பட்டியலை திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதில் வில்லியனூர் தொகுதியில் முகமது ஹாலித் என்ற இஸ்லாமியர் போட்டியிடுகின்றார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு