தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாணவர்களுக்கான "ஆளுமை பயிற்சி முகாம்" அழகியமண்டபம் கிரீட் மஹாலில் 03.04.2016 அன்று நடைப்பெற்றது.
இந்த முகாமிற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் S.ஜாஸிம் அஹமது தலைமையேற்றார், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் L.அப்துல் ரஹ்மான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஐ அறிமுகப்படுத்தினார், கேம்பஸ் ஃப்ரண்ட் -ன் தமிழ் மாநில தலைவர் S.முஸ்தஃபா சமூக மாற்றத்தில் மாணவ செயல்வீரர்களின் பங்கு அவசியமானது என்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில செயற்குழு உறுப்பினர் நாகூர் மீரான் மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கினார், எழுத்தாளர் செய்யது அலி இளமை பயனம் என்ற தலைப்பில் பேசினார். கேம்பஸ் ஃப்ரண்ட் -ண் குமரி மாவட்ட தலைவர் S.ஜாஸிம் அஹமது நன்றியுரைஆற்றினார்
இந்த முகாமில் பல மாணவர்கள்கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்