தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், வீட்டு உபயோக பொருள்விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அடுத்தடுத்த கடைகளுக்கு பரவியது. இதில், எட்டுக் கடைகளில், பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதை அறிந்த எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயல்வீரர்கள், தீ அணைப்பு துறையினர் வருவதற்கு முன் தீ அணைப்பு செயலில் ஈடுபட்டனர்.
இரவு வரை தங்களுடைய களப்பணியை ஆற்றி வந்தனர்.
மேலும் இந்நிகழ்வின் போது மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் அஹமது மைதீன் ஆகியோரின் தலைமையில் தொண்டர்கள் பணியாற்றினார்கள்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்