என்ன எழுதுவது என்று தெரியாமல் யோசித்து கொண்டே தொலைகாட்சியை உயிர்பித்தபோது ஏதோ ஒரு அலைவரிசையில் ஓடி கொண்டு இருந்தது so called reality show.அதில் அரங்கேறும் கூத்துகளை பார்த்த போது எனக்கு தோன்றிய என் எண்ணங்களும் கேள்விகளும் தான் இந்த கட்டுரை.
பாட்டு திறமையை வளர்ப்பதும்,நடன கலைஞர்களை உருவாக்குவதும் பாராட்ட பட வேண்டிய ஒன்று தான் .ஆனால் வியாபார நோக்கத்திற்காக தேவை இல்லாத நாடகங்களை அரங்கேற்றுவதும்,பாட்டையும் நடனத்தையும் தவிர வேறு எதுவுமே கலைகள் இல்லை என்பது போல் சித்தரிப்பதும் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை வெறுப்பதிற்கான முக்கிய காரணம்.
அது ஏனோ தெரியவில்லை இத்தகைய நிகழ்சிகளுக்கு மட்டும் sponsor கள் வந்து குவிகிறார்கள்.நம் மக்களும் இதில் கலந்து கொள்ள முந்தைய நாள் இரவில் இருந்து கால் கடுக்க காத்து இருந்து ,ஏதோ காண கிடைக்காததை கண்டது போல் முட்டி மோதி கொண்டு உள்ளே செல்வார்கள்.
அங்கு mark போட என்று இருப்பவர்களுக்கு முன் ஆடி பாடி தேர்வாகி,அதை பதிவு செய்து இரண்டு வாரம் ஓட்டுவார்கள்.இது வரை கூட பொறுத்து கொள்ளலாம்.
அதற்கு பிறகு அரங்கேறும் கூத்துகள் தான் உச்சகட்டம்.வாரம் ஏதாவது ஒரு round வச்சு .அதில் best performer ,worst performer என்று விருதுகளை வழங்கி இறுதியாய் elimination என்று யாரையாவது வீட்டுக்கு அனுப்புவார்கள்.eliminate ஆனவர்களை விட உடனிருப்பவர்கள் அழும் அழுகைக்கு முன் சீரியல் நடிகைகள் கூட தோற்று போய் விடுவார்கள் .
இந்த நிகழ்சிகளில் இன்னுமொரு கொடுமை விவரம் அறியா பிஞ்சுகளை இரட்டை அர்த்த பாடல்களை பாட வைப்பதும்,அரைகுறை ஆடை ஓடு ஆட விடுவதும் தான்.இதை விட வருத்தம் தருவது அதை பார்த்து அவர்கள் பெற்றோர்கள் வெட்க்கம் இல்லாமல் சிரிப்பது தான்.ஏதோ அதில் தோற்று போய் விட்டால் வாழ்க்கையே தோற்று பொய் விட்டதாய் அவர்களுக்கு ஏன் ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள்.
சிறு வயதில் நம் மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள் தான்.நாம் எதிர்காலத்தில் என்னவாய் ஆக போகிறோம் என்பதை முடிவு செய்கிறது.அந்த வயதில் அவர்களுக்கு நல் எண்ணங்களை விதைப்பதை விட்டுவிட்டு அவர்களை ஏன் இந்த சிக்கலான வலையில் விழ வைக்குறீர்கள்.
trp rating ற்காக வேண்டும் என்றே சண்டை போட விடுவதும்,அதை கண்டு களிப்பதுமாய் இருக்கும் இத்தகைய channel களை எந்த பிரிவில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
தொலைக்காட்சி என்பது இன்று எல்லா இல்லங்களிலும் உள்ளது.நாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் நம் வீட்டு வரவேற்ப்பறையில் வந்து இருக்கும் தவிர்க்க முடியாத விருந்தாளி ஆகிவிட்டது.இந்த reality show க்களிலும்,சீரியல் களிலும் ஒளிபரப்பப்படும் காட்சிகளை பார்த்தால் இனி வரும் காலங்களில் படங்களுக்கு மட்டுமல்ல தொலைகாட்சிகளுக்கு என்று தனி தணிக்கை குழு அமைக்க வேண்டும் போல.
திறமைகளை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட reality show க்கள் இன்று அதன் நோக்கத்தை மறந்து வேறு எதையோ நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இன்றும் இதே தேசத்தில் தான் பல திறமைகள் இருந்தும் அதை சரியாய் வெளிபடுத்த வாய்ப்பு கிடைக்காமல்,உதவி புரிய யாரும் இல்லாமல் பல திறமைசாலிகள் ஒடுங்கி,ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள்.ஏன் அத்தகையவர்கள் எல்லாம் இந்த sponsor கள் கண்களுக்கு புலப்படவில்லை.உண்மையாய் திறமைகளை ஊக்குவிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால் தானே அவர்கள் எல்லாம் தெரிவார்கள்.அவர்களின் நோக்கம் வியாபாரம் மட்டும் தானே.
நீங்கள் உங்கள் வியாபாரத்திற்காக என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள்.ஆனால் தயவு செய்து பரிசளிப்பு விழாவில் நீங்கள் சொல்லும் அந்த trademark dialogue ஆன "'எங்களின் ஒரே நோக்கம் திறமைசாலிகளை ஊக்குவிப்பது தான் "என்று மட்டும் இனி சொல்லாதீர்கள்.
அவர்களை மட்டும் குறை சொல்லி ஒன்றும் ஆக போவது இல்லை.இனியேனும் இந்த reality show போதையில் இருந்து வெளி வர வேண்டியது நம் கையில் தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்