அதிகம் படிக்கப்பட்ட பதிவு

திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட அப்பாவி தமிழக இளைஞர்...!!!

மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை என்ற ஊரை சேர்ந்த முகமது சலீம் என்கிறவர் சென்னை விமாண நிலையத்திலிருந்து குவைத் நாட்டிற்க்கு புறப்பட்டுள்ளார். அவர் பயணம் புறப்பட்ட அன்று சென்னை விமாண நிலையத்தில் மாற்று மத சகோதரர் ஒருவர் ஒரு பெண்ணுடன் சற்றுமுன் குவைத் சென்ற விமாணத்தில் எனது உறவினர் உணவு பொருட்களை விட்டு சென்றதாக கூறி இதனை குவைத் செல்லும் நீங்க அவரிடம் கொடுத்துவிடுங்கள் என கூறி தொலைபேசி எண்னுடன் ஒரு சிறிய பார்சலை கொடுத்து உள்ளார்.
ஆபத்திற்கு உதவ எண்னிய சலீம் அதில் என்ன இருப்பதென்று அறியாமல் குவைத் வந்தடைந்துள்ளார். குவைத் விமாண நிலைய சுங்க இலாக்கா பரிசோதனையின்போது சகோதரர் கொண்டு வந்த பார்சலில் கஞ்சா (Marijuana) எனப்படும் போதை பொருள் இருப்பது தெறியவர, சலீம்  குவைத் அரசு விமாண நிலைய காவல் துறையால் கைது செய்யப்படுகிறார்.

சலீமின் கைது சம்பவம் குறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் குவைத் மண்டல தலைவர் தஞ்சை பாரூக் மஹராஜ் அவர்களுக்கு தகவல் கிடைக்க களத்தில் இறங்கியது தமுமுக குவைத் மண்டல தலைமை நிர்வாகம் இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் (BK சின்ஹா) குவைத் மண்டல தலைமை நிர்வாகம் பல்வேறு பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் சலிம் அவர்களின் முதலாளி அரபியும் அவரை விடுவிப்பதற்க்கு எந்த முயற்ச்சியும் எடுக்காத நிலை ஏற்ப்பட தூரக அதிகார் இந்தியன் எம்பசி ஆஃப் அத்தாரிட்டி சகோ சின்ஹா அவர்களுடன் மண்டல தலைவர் தஞ்சை ஃபாரூக் மஹராஜ் மற்றும் கிஸ்வா அமைப்பின் தலைவர் அலி ரஷாதி ஆகியோர்  பேச்சுவார்தை நடத்தி அப்பாவி சகோதரரை விடுவிக்க முயற்ச்சி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொன்டார்.

அதன் பின் சலிம் அவரின் அண்ணன் இல்லியாஸ் அவர்களின் அரபி முதலாளியின் உதவியோடு சலிம் தற்ச்சமயம் சிறையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அவர்  சிறையில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் சில சகோதரர்கள் திட்டமிட்டு மூகநூல் வாட்சப் போன்ற வலைதளங்களில் சலீமை பற்றிய தவறான செய்திகளை பறப்பிவருகின்றனர்.  

இது போன்று தவறான செய்திகள் பரவி வருவதை  தடுகவேண்டும் என்பன்  அடிப்படையில் 09/05/2016  இரவு தமுமுக குவைத் மண்டல தலைமை நிர்வாகிகள்,மண்டல தலைவர் தஞ்சை ஃபாரூக் மஹராஜ் அவர்கள் தலைமையில்,
தமுமுக குவைத் மண்டல செயலாளர் ஜபருல்லா கான்,
தமுமுக குவைத் மண்டல பொருளாளர் அப்துல் சுக்கூர், 
மண்டல மக்கள் தொடர்பு செய்தியாளர்  கஜ்ஜாலி, 
மண்டல இரத்தான பொருப்பாளர் ஆக்கூர் முஜிபுர்ரஹ்மான்,
மண்டல மக்கள் உரிமை பொருப்பாளர் கட்டிமேடு வசீம்,ஆகியோர் சலீமை அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை தமுமுக குவைத் மண்டலம் செய்து தறுவதாககூறி  சலீம் அவர்களை தமுமுக குவைத் மண்டலம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தற்போது சலீம் அவர்கள் தமுமுக குவைத் மண்டல மக்கள் தொடர்பு செய்தியாளர் சகோதரர் கஜ்ஜாலி அவர்கள் பாதுகாப்பில் இருந்து வருகிறார். சலீம் அவர்கள் கூடியவிரைவில் தாயகம் செல்வதற்க்கான முழு முயற்ச்சியை தமுமுக குவைத் மண்டலம் செய்துவருகிறது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு