நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு இன்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி வாகை சூடினார் மஜகவின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நாகை சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக்கொண்டார் . அவருடன் நாகை மாவட்ட அதிமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னால் அமைச்சர் ஜீவானந்தம், மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாகை தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் தங்க கதிரவன், நாகை நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை தொகுதி அதிமுக செயலாளர் ஆசைமணி, திருமருகல் ஒன்றிய அதிமுக செயலாளர் ராதா கிருஷ்ணன், நாகை ஒன்றிய அதிமுக செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 2011 ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டார். 54,952 வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் இன்று சுமார் 20550 வாக்கு வித்யாசங்களில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜபருல்லாஹ்வை வீழ்த்தினார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்