அதிகம் படிக்கப்பட்ட பதிவு

ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான்

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளர்  மாநில செயலாளர் ஏ.எம். ஷாஜகான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை முஹம்மது யாசின், ஜெகபர் நிஷா தம்பதியருக்கு 25-06-1968-ல் புதல்வராக பிறந்த ஏ.எம். ஷாஜகானுக்கு ஷமீம் நிஷா என்ற மனைவியும் ஷபீக் அஹமது, ஷாகித் அஹமது, ஷராபத் அஹமது என்ற புதல்வர்களும், ஷமிரா ஜஹனாரா என்ற புதல்வியும் உள்ளனர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பி.எஸ்.சி. தாவரவியல் பட்டம் பெற்ற இவர் ஆடுதுறையை அடுத்த திருமங்கலக்குடியில் செயல்படும் அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் செயலாளர் மற்றும் தாளாளராக பணியாற்றுகிறார்.

இவரது தொழில் விவசாயம் ஆகும்.

முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த இவர் தனக்கு வயது தெரிந்த காலம் முதல் அதன் ஊழியராக செயல்பட்டவர். இவரது தந்தை அரசு ஊழியராக இருந்தாலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தீவிர ஊழியராக செயல்பட்டவர்.

1984-ம் ஆண்டு பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேட்பாளராக ஜமால் மொகிதீன் பாப்பா அவர்கள் போட்டியிட்ட போது அவர்களுக்காக தீவிர களப்பணியாற்றியவர். அதே போல் 1989-ம் ஆண்டு திருச்சியில் தலைவர் பேராசிரியர் அவர்கள் போட்டியிட்ட போது முழுமையாக தேர்தல் பணி செய்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருந்த சிராஜுல் மில்லத் வேலூரில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட போது தேர்தல் பணி செய்தவர்.

கல்லூரி மாணவர் பருவத்திலேயே மணிச்சுடர் நாளிதழில் கடிதமும் கருத்தும் பகுதிக்கு தொடர்ந்து எழுதி வந்தவர்.

கடந்த 9 வருட காலமாக ஆடுதுறை ஜாமியா  மஸ்ஜித் செயலாளராக பணியாற்றிவரும் இவர் ஜமாஅத்தினர்களை ஒருங்கிணைத்து பல முறை விழாக்கள் நடத்தியவர்.

2011-ம் ஆண்டு இவர் தாளாளராக உள்ள அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவும் நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

2012-ம் ஆண்டு கும்பகோணத்தில் மாநில அளவிலான கல்வி விழிப்புணர்வு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

2014-ம் ஆண்டு தமிழக அரசியல் கட்சிகளிலேயே முதல்முறையாக முஸ்லிம் லீகின் சார்பில் இணையதள மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி காட்டியவர்.

முஸ்லிம் லீக் அறிவித்த போராட்டங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கே முன்உதாரணமாக நடத்தி காட்டியதோடு, இரத்த தான முகாம் உள்ளிட்ட சமூக பணிகளையும் முன்னின்று நடத்தி வருபவர்.
கடந்த 3 ஆண்டுகளாக திருவிடைமருதூர் வட்டாரத்தில் உள்ள 33 ஜமாஅத்துக்களை ஒருங்கிணைத்து மீலாது மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருபவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கனவுத்திட்டமான பசுமை பூங்காநகர் திட்டம் உருவாகவும் அதில் மருத்துவ கல்லூரி துவக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிக்கு தன்னை முழுமையாக அர்பணித்து செயல்படுபவர்.

தமிழ், ஆங்கிலம் மொழிகளில் சரளமாக பேசும் பேச்சாளரான இவர் சவூதி அரேபியா, துபாய், பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, குவைத், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பலமுறை பயணம் மேற்கொண்டவர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு