நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம். தமிமுன் அன்சாரி, நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துரையை சேர்ந்தவர். தனது 14 வயது முதல் சமூக நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
1995-ல் சென்னை புதுகல்லுரியில் மாணவராக சேர்ந்தப்போது, அரசியல், இலக்கியம், சமூக சேவைகள் என இவரது ஈடுபாடுகள் அதிகரித்தது.1997-ல் புதுக்கல்லுரி
மாணவர் பேரவைக்கு போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
சமூக நீதிக்கான போராட்ட காலங்களில் மாணவர்களை அணிதிரட்டிய இவர், சிறந்த சக பேச்சாளராக உருவாகினார். இவரது பேச்சுகள் மாணவர்களை உசுப்பியது.
மாணவர் இயக்கங்களுடன் உறவை வலுப்படுத்திக் கொண்டார், ஈவ்டீசிங் எதிர்ப்பு, ரேகிங் ஒழிப்பு,போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு என இவர் மேற் கொண்ட முயற்சிகள் இவரை சிறந்த மாணவர் தலைவராக உருவாக்கியது.
கவிதை, கட்டுரை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய முற்போக்கு கவிதைகளும், கட்டுரைகளும் பல பத்திரிக்கைகளில் பிரசுரமானது.
உணர்வு, ஒற்றுமை, ஆகிய பத்திரிக்கைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். மக்கள் உரிமை வார இதழில் 2004 முதல் 2015 வரை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதில் போட்டியிட்டார். 54,952 வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, முற்போக்கு சிந்தனைகள், கல்வி விழிப்புணர்வு சமூக நீதி களங்கள், மனிதநேய பணிகள், இலக்கியம் ஆகிய வட்டங்களில் இயங்கி வரும் இவர் ஹாங்காங்,சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து, புருணே,கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன்,குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்று உரையாற்றியிருக்கிறார். இந்தியா முழுக்க சுற்றுபயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.
ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள், மீனவர்களுக்கான உரிமை போராட்டங்கள், விவசாயிகள் வாழ்வுரிமைக்கான போராட்டங்கள், மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்கள், என இவர் பங்கேற்ற கலங்கள் ஏராளம்.
கடந்த டிசம்பர், 2015-ல் மழை-வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டபோது, நெஞ்சளவு தண்ணிரில் தொண்டர்களுடன் இறங்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இவர் பணியாற்றியது அனைவராலும் பாராட்டப் பெற்றது.
இன்று சமூக இணைய தளங்களில் சிறப்பாக இயங்கிவரும் இவருக்கு எல்லா சமூக மக்களுக்கு மத்தியிலும் பேராதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை கொள்கை அரசியலாக முன்னெடுக்கும் இவர் இம்மாதம்தான் 39 வயதை கடந்த 40 வயதில் நுழைந்திருக்கிறார்.
கட்சிகளை மீறி அனைத்து தலைவர்களுடனும், தொண்டர்களுடனும் பழகுபவர் என்பது இவரது சிறப்பம்சமாகும் .
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்