கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் வேளம் ஊராட்சியில் உள்ள புத்தலத்தில், இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஏற்பட்ட தர்க்கத்தின் போது, முஸ்லிம் லீக்கின் உறுப்பினர் நஸ்ருதீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் தொடர்புபடுத்தி அரசியலாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை. கப்பச்சேரி பஷீர் என்பவரின் ஃபோனை உடைத்தது தொடர்பாக கொலைச் செய்யப்பட்ட நஸ்ருதீன் மீது நாதாபுரம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடந்த தினம் போலீஸ் அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. அன்றைய தினம் நஸ்ருதீன் ஜாமீன் பெற்றுள்ளார். இது தொடர்பாக பஷீருக்கும், நஸ்ருதீனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில் பஷீர், நஸ்ருதீன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நஸ்ருதீன் மரணமடைந்தார். இச்சம்பவத்தில் அரசியலுக்கு தொடர்பு இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்துள்ளனர்.
ஆனால், இச்சம்பவத்தை திசை திருப்பி அரசியலாக்கியதை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கும், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை உள்ளூர் மக்கள் புரிந்துள்ளனர்.ஆனால், சிலர் இதனை வேண்டுமென்றே அரசியலாக்கி வருகின்றனர்.
தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கட்சி கடைப்பிடிக்கும்உயர்ந்த விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் துயரசம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த கொலைக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, கொலையில் தொடர்புடைய பஷீரை கட்சியிலிருந்துநீக்கியது. மேலும், அவருக்கு எந்தவிதமான சட்ட உதவியும் செய்வதில்லை என எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவெடுத்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.உள்ளூர் மக்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையேயான பிரச்சனை என்பதை புரிந்துள்ள போதும், கடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைளின் காரணமாக எரிச்சலடைந்த காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இதனை அரசியலாக்கி பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தனிப்பட்ட பிரச்சனைகளை எந்தவொரு காரணத்தாலும் அரசியலாக்கி வன்முறைச் சம்பவங்களுக்கு ஊக்குவிக்கக் கூடாது. நாட்டின் அமைதிக்கும், மனிதனின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை எஸ்.டி.பி.ஐ கட்சி அங்கீகரிக்கவில்லை. இச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்டது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு எவ்வித பங்கும் இல்லை. இச்சம்பவத்தின் பெயரால் கட்சி அலுவலகங்கள், வீடுகள், வாகனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தி அழிப்பது தொடரக்கூடாது. போலீஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் பொறுமையை கடைப்பிடிக்கவேண்டும். என்பதே எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்