அதிகம் படிக்கப்பட்ட பதிவு

காஷ்மீரில் அடித்தால் கன்னியாகுமரியில் குரல் கொடுக்கும் கேம்பஸ் ஃப்ரண்ட்

காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் ராணுவ  அத்துமீறல்களை கண்டித்தும் AFSPA சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅர்ப்பாட்டம்.

தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா குமரி மாவட்டம் சார்பாக  காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் ராணுவ  அத்துமீறல்களை கண்டித்தும் AFSPA சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும் 29.07.2016 (வெள்ளிகிழமை) அன்று மாலை 4.30 மணிக்கு  அழகியமண்டபம்  ஜங்சனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  கேம்பஸ் ஃப்ரண்டின் குமரி மாவட்ட தலைவர் எஸ்.ஜாஸிம் அஹமது தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் எஸ்.முஸ்தபா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சுல்ஃபீக்கர் அலி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட தலைவர் M.ஷேக் நூறுத்தீன் ஆகியோர் கண்டன உரையாற்றுகினார்கள். கேம்பஸ் ஃப்ரண்டின் குமரி மாவட்ட குழு உறுப்பினர்  அஹமது ஃபயாஸ் நன்றியுரையாற்றினார்.

இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு கேம்பஸ் ஃப்ரண்ட் சகோதர சகோதரிகள் காஸ்மீர் குறித்து  வரைந்த பதாகைகள் பிடித்து கொண்டும் தஃப்ஸ்கொட்டு அடித்தும்கண்டத்தை பதிவுசெய்தனர்

கேம்பஸ் ஃப்ரண்ட்  காஷ்மீர் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது

1.மத்திய அரசு பொது வாக்கெடுப்பு எடுத்து காஷ்மீர் மக்களின் உரிமைக்கு பதில் கூற வேண்டும்

2.சிறப்பு ராணுவ சட்டமான AFSPA வை திரும்ப பெற வேண்டும்

3.மனித உரிமை மீறல்களை நடத்தும் இந்திய ராணுவத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதுடன் இந்திய ராணுவம் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என கேட்டுக்கொள்கிறது

4.மத்தியில் ஆளும் பாஜக அரசு காஷ்மீர் மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு தலையிட்டு காஸ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும்.

5.பெல்லெட்ஸ் குண்டு பயன்படுத்துவது, பெண்களை வன்புணர்வு செய்வது , குழந்தைகளை கொல்வது போன்ற இழிசெயல்களைசெய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு