அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சேலம் சிறையில் மனித உரிமை ஆர்வலர் மீது கொடூர தாக்குதல்! - எஸ்டிபிஐ கடும் கண்டனம்!

இது குறித்து‪ SDPI‬ கட்சியின் மாநில தலைவர்‪ கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி‬ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சேலத்தில் ரயில்வே பாலத்திற்காக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன் மக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமல், அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இத்தகைய அநீதியான நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் சமூக ஆர்வலர்‪ ‎பியூஸ்‬‪ மனுஷ்‬. அவரது தாத்தா காலத்திலேயே பியூஸ் குடும்பத்தினர் சேலத்திற்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார்கள். சரளமாக தமிழ் பேசக்கூடிய இவர் 2010-ல் சேலம் மக்கள் குழுவை துவங்கி ஏரிகளை தூர்வாருவது, தீவுகளை அமைப்பது, மரங்களை நடுவது போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஏரிகளில் 50-க்கும் மேற்பட்ட தீவுகளை உருவாக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். 55 ஏக்கர் பரப்புள்ள மூக்கணர் ஏரியை தூர்வாரியுள்ள இவர். சென்னை, கடலூர் பெருவெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, அதற்காக யூ.என்.என்.ஐ.பி.என் நடத்திய பாராட்டு விழாவில் நிதிஅமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து பாராட்டும், பரிசும் பெற்றுள்ளார்.

சிறந்த சூழலிய செயல்பாட்டாளராகவும், அநீதிக்கு எதிரான மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வரும் ப்யூஸ் மனுஷ், சேலத்தில் ரயில்வே பாலத்திற்காக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன் மக்களுக்கு முறையான அறிவிப்பு செய்யாமல், அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டார்.மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டும்,சித்தரவதைக்கும்ஆளாக்கப்பட்டும்உள்ளதாக தெரிகிறது. இந்த கொடூர செயலை வன்மையாக கண்டிப்பதோடு, மனித உரிமை ஆர்வலர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறும்,ப்யூஸ் மனுஷ் மீதான வழக்கை திரும்ப பெறுவதோடு தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு