அதிகம் படிக்கப்பட்ட பதிவு

காஷ்மீர் பிரச்சினை - செந்தமிழன் சீமான் அறிக்கை

"காஷ்மீர் மக்களை இனிமேலும் தனிமைப்படுத்தி, ‘தீவிரவாதி’, ‘பயங்கரவாதம்’ கட்டம் கட்டி அழித்தொழிப்பதை அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது.

மேலும், ஆக்கிரமித்துள்ள ராணுவமும், சிறப்பு ராணுவச் சட்டங்களும் உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், காஷ்மீர் மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை இந்தியப்பெருநாடு ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. அழிவிற்கும், இழிவிற்கும் உள்ளாகி இருக்கிற காஷ்மீர் மக்களின் ஆற்றமுடியா சோகத்தில் தமிழர்களாகிய நாங்களும் பங்கேற்கிறோம் என்றும், காஷ்மீர் சகோதர, சகோதரிகளுக்கு என்றென்றும் தமிழ்த்தேசிய இனம் உடன்பிறந்த சகோதரனாய் விளங்கும் எனவும் இதன்வாயிலாக நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது.

நன்றி: முகவை அப்பாஸ்

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு