Students Islamic Organisation of India - SiO (இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு - எஸ்.ஐ.ஓ) 19-10-1982 அன்று துவங்கப்பட்டு இன்றோடு 34 ஆண்டுகள் முடிவடைகிறது.
இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் சமூகத்தை புணரமைக்கும் உயர்ந்த இலட்சியத்திற்காக வேண்டி மாணவ இளைஞர்களை செதுக்குவதை இலக்காகக் கொண்டு கடந்த 34 ஆண்டுகளாக இந்திய நாட்டில் பணியாற்றிவரும் SiO பல்வேறு சாதனைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சவால்களையும் கடந்து வந்திருக்கிறது.
இன்று இந்திய தேசத்தில் இலட்சக்கணக்கான இளம் நெஞ்சங்களின் இதயத்துடிப்பாக SIO வளர்ச்சியடைந்து இருக்கிறது.
SiO ஆசியாவிலேயே மிகப்பெரிய மாணவர் அமைப்பு என்பதும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற அமைப்புகளில் சிறந்த ஒரு அமைப்பாக SiO-வை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்துடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகம் கல்வியின் அவசியத்தை உணராது இருந்த சூழ்நிலையில், தொடர் பணிகள் மற்றும் பிரச்சாரத்தின் மூலமாக அதை மாற்றுவதற்காக SiO இந்தியா முழுவதும் ஆற்றிய பணிகளுக்கான மாற்றங்களை இன்று சமூகம் கண்கூடாக கண்டு வருகிறது.
SIO கல்வி கற்பதற்காக மக்களை ஊக்கப்படுத்தி வருவது என்பது மிக உயர்ந்த இலக்கை அடைய வேண்டி, தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அமைந்ததாகும். கல்வியின்அவசியத்தை புரியாமல் விமர்சனம் செய்து வந்த பல்வேறு சமூக அமைப்புகள் கூட, இன்று SiO சொல்லி வந்தகல்வியின் அவசியத்தை புரிந்து கொண்டு, தாங்களும் அவற்றை செயல்படுத்திக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்க நல்லதொரு மாற்றம்.
அதற்காக வேண்டி பயணிக்கும் இந்த வேளையில், எஸ்.ஐ.ஓ. கல்வியின் அடுத்த கட்டமான "கல்வியின் தத்துவங்கள்" குறித்தும், கல்வியின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்கு மற்றும் பயணிக்க வேண்டிய பாதை குறித்தும், இன்று தேசம் முழுவதும் பரவலாக பிரச்சாரங்களை செய்து வருகிறது.
முஸ்லிம் சமூகத்திடையே மட்டுமின்றி, சகோதர சமூகத்தை சார்ந்தவர்களிடையேயும் SiO பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் SiO வின் பணிகளில் இலட்சக்கணக்கான மாணவ இளைஞர்கள், சிறுவர்கள், மற்றும் பொது மாணவர்கள் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறது.
மேலும் எஸ்.ஐ.ஓ துவங்கிய தினத்தை ஒட்டி கடலூர் துறைமுகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்