அதிகம் படிக்கப்பட்ட பதிவு

அர்ஜன் சம்பத் மீது மீண்டும் புகார் - தடா.ஜெ. அப்துர் ரஹீம்

ஆயுத பூஜையில் பூஜை செய்யப்பட்ட துப்பாக்கிகள் என் மகன் ரைஃபில் க்ளப்பில் பயிற்சிக்கு பயன்படுத்துவது - அர்ஜன் சம்பத் பேட்டி அளித்ததை அடுத்து

இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா.ஜெ. அப்துர் ரஹீம் தலைமையில் இன்று மீண்டும் காவல்துறை டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது

அந்த மனுவில் அர்ஜூன் சம்பத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை வரவேற்கும் அதே நேரத்தில்

கோவை 1989 ஆம் ஆண்டு ஹக்கீம் கொலை மற்றும் 1997 நவம்பர் கலவரத்தின்போது 4 இஸ்லாமியர்களை உயிரோடு எரித்து கொலை ஆகிய 5 கொலைகளில் நேரடி தொடர்புடைய இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் சில தினங்களுக்கு முன்பு எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை வைத்து ஆயுத பூஜை கொண்டாடி சிக்கினார்...

இதைப்பற்றி  தடா.ஜெ.அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையிலான இந்திய தேசிய லீக் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்தனர்......

அதன் அடிப்படையில் அவர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அப்போது அந்த துப்பாக்கிகள் தனது மகன் ரைஃபில் க்ளப் துப்பாக்கி பயிற்சி பள்ளியில் பயன்படுத்தும் துப்பாக்கி என்று ஊடகம் மூலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார் ......

எனவே கோவை காவல்துறை எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கிகளை வைத்து பயிற்சி வழங்கும் சட்டத்திற்க்கு விரோதமான அந்த பயிற்சி பள்ளி எங்குள்ளது என்பதனை கண்டறிந்து அந்த பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.....

மேலும் சட்ட விரோதமான ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்துடைய மகன் மற்றும் அவரோடு இன்னும் எத்தனைபேர் பயிற்சி எடுக்கின்றார்கள் என்பதை கண்டறிந்து அனைவரையும் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் (UAPA) கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்......

கோவையில் மிகப்பெரிய கலவரத்தை தூண்ட முயற்சித்து வரும் அர்ஜுன் சம்பத்தை 1997 கலவரத்தின் போது காவல்துறை காப்பாற்றியதை போல் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது

எனவே இதுபோன்ற பயங்கரவாதிகளை கைது செய்து இந்து மக்கள் கட்சியை தடைசெய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் இன்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு