பெரியார் சிலைகளை நீக்கிவிட்டு அங்கு பசும்பொன் தேவர் சிலைகளை வைக்கவேண்டும் என கூறிய அர்ஜூன் சம்பத்திர்க்கு ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் இறையடியார் எஸ்.ஏ. காஜா மொய்தீன் கூறியதாவது,
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக இஸ்லாமியர்கள் இடம்பெயரக்கூடாது என அன்புக் கட்டளையிட்ட தேவர் ஐயாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தமிழக இஸ்லாமியர்கள் எவருமே இடம் பெயரவில்லை.
காமராசரின் ஆட்சிக் காலத்தில் ஒரு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேவர் ஐயா தலைமறைவாக இருக்கும்போது தனக்கு பாலூட்டி வளர்த்த கமுதி ஆயிசா பீவி அம்மாள் இறந்து விடவே அங்கு நிச்சயம் தேவர் ஐயா வருவார் என புலனாய்வுத்துறை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. துருக்கி தொப்பி, ஜிப்பா அணிந்து வில்லுவண்டியில் முஸ்லிம் பெரியவரைப் போல அங்கு வந்து தனக்கு பாலூட்டிய அத்தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் சென்றவுடனேதான் வந்து சென்றது முத்துராமலிங்க தேவர் என அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
காந்தியை இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு சுட்டுக் கொன்று நாடு முழுவதும் கலவரம் ஏற்படுத்த முயன்ற போது தெற்கிலே அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு முஸ்லிம் நிச்சயம் இக்காரியத்தை செய்திருக்க மாட்டார். யாரும் கலவர நோக்கில் செயல்பட வேண்டாமென கட்டளையிட்ட தெற்குத்திசை தந்த நல்லுள்ளம் எங்கள் ஐயா.
இன்றும் எங்களைப் போன்ற தமிழ் முஸ்லிம்களின் கடைகளில் காலண்டர்களில் தேவர் ஐயாவின் படம் இடம் பெற்று இருக்கும். அதற்கான காரணம் தேவர் பெருமகனார் முஸ்லிம்களின் மீது வைத்திருந்த அளவு கடந்த நேசமும், முஸ்லிம்கள் ஐயாவின் மீது வைத்திருந்த கண்ணியமுமே.
"பிறப்பிலேயே மதவெறி ஊறிப்போன உன்னைப்போன்ற பார்ப்பன அடிமைகளுக்கு இந்த பந்தம் புரிய வாய்ப்பில்லை. உன் வெறுப்பு அரசியலுக்கு தேவர் ஐயாவை பயன்படுத்தும் உள்நோக்கத்தையும் கிழித்தெறிவோம் பிரியாணி அண்டா திருடர்களா" என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்