அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சிறைத்துறை அமைச்சருடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு!

இன்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.சண்முகம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தார்.

சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் குறித்தும், அவர்களின் உயிராபத்து நோய்களுக்கு உரிய உயர் சிகிச்சை அளிப்பது குறித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அம்மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு