கோவையில் வசித்து வரும் இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விஜயதசமி தினமான 10-10-2016 அன்று ஆயுத பூஜை என்னும் பெயரில் அவருடைய இந்துத்துவ அமைப்பிற்கு நேர் மாறான கொள்கை கொண்டுள்ளவர்களையும் அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக சட்ட பாதுகாப்பு கருதி தன்னிடம் உள்ள ஆயுதங்களில் சில ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு பூஜை புணஸ்காரம் சம்பந்தமான படங்கள் முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி உள்ளதன் உள் நோக்கம் குறித்து தாக்கல் செய்கிற புகார் மனு
1. இந்த மனுவானது இந்திய ஆயுதச் சட்டம் 1978ன் படியான 36 சட்ட பாதுகாப்பு அமைப்பான காவல் துறைக்கு தகவல் தருவது37 அதன் அடிப்படையில் கைது மற்றும் தள ஆய்வுகள் செய்து கைப்பற்றுதல் மற்றும் 40 நல்லெண்ண அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் சமர்பிக்கப்படுகிறது.
2. மேலும் படத்தில் காட்டப்பட்டுள்ள அளவில்கூட கொலைக்கருவி ஆயுதங்களை தனி நபர்ஒருவர் ஆளுகையில் வைத்திருப்பது என்பது சட்டத்தால் பிரிவு 45ன் படி எந்தவகையிலும் விலக்கு அளிக்க முடியாத (does not comes and makes into exemtption) செயல் என்பதாகும்.
3. சமூக ஊடகமான அவரது முகநூல் பக்கத்தில் பதியவிட்டிருப்பது அதன் வழியாக மற்ற ஊடகங்களுக்கும் பரவச்செய்திருக்கும்
செயலானது பிரிவு 20ன் படி சமீபத்தில் நடந்த இந்து முன்னணி நபரின் கொலைக்காக முஸ்லிம் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டு கோடிக்கணக்கில் சேதம் விளைவிக்காப்பட்டுள்ள தருணத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கையை கேட்க்கும் இத்தருணத்தில் குழப்பத்தையும் அச்சுறுத்தல் சூழ்நிலையையும் ஏற்படுத்துவதால் இதை செய்துள்ள நபர் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டியவர்.
4. மேலும் ஆயுத சட்ட பிரிவுகள் 2(சி)2(இ)ஆகியவற்றின் ஆயுதம் என்பதன் வரைப்படி புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் எதுவும் வீட்டு உபயோகத்திற்க்கோ அல்லது விவசாய உபயோகத்திற்கோ பயன்படுத்துவன அல்ல என்பது
தெளிவாக தெரிகிறது. மேலும் பிரிவுகள் 7,8,ன் படி படத்தில் கண்ட கொலை கருவிகள் போன்ற (all materials like deadly weapons) ஆயுதங்களை சட்ட அனுமதியின்றி (அரசியல் அமைப்பு சட்ட அனுமதிபெறவே முடியாது )
வைத்திருப்பது தடுக்கப்பட வேண்டியது என்றும் அவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட வேண்டியவர்கள் மற்றும் ஏழுஆண்டுகள் வரை
தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் என இச்சட்டத்தின் பிரிவுகள் 20,27, மற்றும் 28 மெய்ப்பிக்கிறது.
5. சிறுபான்மையினரின் வாகனங்களை வாள் போன்ற நம்மோடு நல்லுறவாக உள்ள அரபுநாட்டு அரசு முத்திரை படங்களை ஒட்டியிருந்தால் கூட கைது செய்து நாட்டுநலனஎன்ற பெயரில் விசாரணைவளையத்தில்
கொண்டு வந்தும்,பிரிண்டிங் செய்த பனியனை அணிந்த அப்பாவி இளைஞ்சர்களை கைது செய்யும் காவல்துறை. சடடப்படி கையிருப்பில் மறைவாக கூட வைக்க முடியாத கொலைக் கருவிகளை பொது வெளியில் படமாக வெளியிட்டு சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மேற்படி நபர் அர்ஜுன் சம்பத் அவர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. தமிழ்நாடு காவல் துறை இதுமாதிரியான தூண்டுதலை கட்டுப்படுத்தாதா?
இக்கடிதத்தை பிரிவு 36ன்படி பொது அமைதி கருதி தரப்படும்
இந்தபுகாரை ஏற்று அர்ஜுன் சம்பத்திடம்
இது போல் எவ்வளவு ஆயுதங்கள்
உள்ளது என்பதை தள ஆய்வு செய்து கைப்பற்றி உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து கைது செய்து பொது அமைதியை ஏற்படுத்த வேண்டுகிறோம் என அம்மனுவில் குறிப்பிட்டுயிறுந்தது.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்