அதிகம் படிக்கப்பட்ட பதிவு

முதலமைச்சரின் உடல் நலம் விசாரித்தனர் மறுமலர்ச்சி தமுமுகவினர்

மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஜெ.சீனி முகம்மது தலைமையில் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் உடல் நலம் குறித்து அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் நேர்முக முதன்மை உதவியாளர்களிடம் நலம் விசாரித்தனர்.

இச்சந்திப்பில் மதமுமுக மாநிலத் துணைத் தலைவர் வழக்கறிஞர் வசீர் சுல்தான் தலைமை நிலைய செயலாளர் J.S. மீரான் மாநில துணை செயலாளர் அப்துல் கைய்யும் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முகம்மது ஷியா. தென் சென்னை மாவட்ட தலைவர் ஷெரிப் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் இப்ராஹீம் உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் இஸ்மாயில் சிராஜி உள்ளிட்ட சென்னை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் முதல்வர் நலம் பெற வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மாநிலத் தலைவர் ஜெ. சீனி முகம்மது அவர்களிடம் பேசிய அமைச்சர்கள் முதல்வர் நல்ல நலமுடன் இருப்பதாகவும் உடல் நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாகவும்  திபாவளிக்குள் இல்லம் திரும்புவார் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு