அதிகம் படிக்கப்பட்ட பதிவு

முதலில் தேவை பொது கிரிமினல் சட்டம் - எஸ்.எம்.எஸ். மதார்

சவூதி அரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.சவூதி அரேபியாவின் பாரபட்சமற்ற சட்டம் என்று  பத்திரிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலும் படித்து வருகிறோம். முதலில் இது சவுதி அரேபிய சட்டம் இல்லை. இஸ்லாத்தினுடைய சட்டம். இறைவனின் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழங்கிய சட்டம். அதைத்தான் சவூதி அரசாங்கம் கடைபிடித்து வருகின்றது என்பதை மாற்று மத சகோதரர்களுக்குப் புரிய வைத்திட வேண்டியது நமது கடமை .

உயர் குலத்தைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்மணி திருடிய போது, திருடினால் கையை வெட்ட வேண்டும் என்ற (இஸ்லாமிய) சட்டத்தை, உயர் குலப் பெண்மணிக்காக வளைத்திட முயன்றபோது, இறைவனின் தூதராகவும், ஆட்சித் தலைவராகவும், தலைமை நீதிபதியாகவும் இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என் மகள் பாத்திமா திருடி இருந்தாலும் கையை வெட்டுவேன் என்று சட்டத்தை எல்லோருக்கும் சமமாக்கினார்கள் என்ற செய்தியை,இஸ்லாமிய ஆட்சியின் உயர்ந்த, உன்னத நிலையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லிட வேண்டும்.

இஸ்லாமிய சட்டங்கள் கடுமையானது மட்டும் அல்ல. ஆண்டிக்கும் - அரசனுக்கும் சமமானதும் கூட.

சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்பதையும் பல நாட்டு நடப்புகளோடு ஒப்பிட்டுச் சொல்லிட வேண்டும்.

இன்றைக்கு பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று கூப்பாடு போடும் மதவெறிக் கூட்டம் , இஸ்லாத்தினுடைய இந்த வழிமுறையை, அழகிய நெறிமுறையைக் (சவூதி அரேபியாவில் நடந்ததைக்)  கண்டும் காணாதது போல் குருடர்களாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய சட்டங்களை காட்டுமிராண்டிச் சட்டமாக கழுவி ஊத்திடவே கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்பதை உணர்த்திட வேண்டும்.

பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று கூப்பாடு போடும் குறைமதியாளர்களே..! முதலில் இருக்கின்ற சட்டத்தை எல்லோருக்கும் சமமாக ஆக்கிட முன்வாருங்கள்.

நாட்டு (மக்களு)க்குச் சோறுபோட  விவசாயி ஒருவன் வங்கியில் வாங்கிய கடனுக்கு, ஒரு தவணை கட்டத் தவறினால். அவனை வங்கி ஊழியர்களும், காவல்துறையும் நடு ரோட்டில் போட்டு அடித்து இழுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் சட்டத்தை, மல்லையாக்கள் பல ஆயிரம் கோடி) கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல், ஒரு மஞ்சள் நோட்டீஸ் மூலமாக டிமிக்கி கொடுக்கும் போது, அவர்களைப் பாதுகாக்கவும், பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் அதே சட்டம் வளைகின்றது என்று சொன்னால்.

50 ரூபாய் திருடியவனை காவல்துறை நாய் அடிப்பது போல் அடித்து, வாய்க்குள் துப்பாக்கியைச் சொருகி சுட்டுக் கொல்ல முடிகிறது.ஆனால் நாட்டைச் சுரண்டி ஆயிரமாயிரம் கோடிகளை கொள்ளையடித்தவர்களை அதே காவல்துறை கொண்டு பாதுகாக்க முடிகிறது என்று சொன்னால், முதலில் இந்த பாகுபாடுகளை நீக்க , எல்லோர்களையும்  பொதுவாக நடத்த, உங்களுக்குத் துணிவிருந்தால் பொது கிரிமினல்  சட்டம் கொண்டு வாருங்கள்.  அதுக்குப் பிறகு பொது சிவில் சட்டத்தைப் பற்றி பேசுங்கள் என்பதை உரக்கச் (மண்டையில் உறைக்கச்) சொல்லிட வேண்டும்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு