அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரியில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும் , காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கவும் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லா, தமுமுக மாநில துணைத் தலைவர் குணங்குடி அனிபா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex M.P, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex M.P மற்றும் திமுக சார்பில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர்.

விவசாய சங்க பிரதிநிதிகளும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு