காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்றும் இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்துவிவசாய சங்கங்களும் அறிவித்தன.
அதன்படி நேற்று பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. இதனால், 16 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
இந்த நிலையில், இன்று திருவாரூரில் இரயில் மறியல் பேராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா அவர்கள், மமக மாநில செயலாளர் தஞ்சை பாதுஷா, அமீன் மற்றும் மமக மாவட்ட செயலாளர் தீன், தமுமுக மாவட்ட செயலாளர் ஹக் மற்றும் திருவாரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்