அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: பாப்புலர்ஃப்ரண்ட்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலக கூட்டத்தில் பொது சிவில் சட்டம்  ஏற்கத்தக்கதல்ல என்றும்,    மத்திய அரசு  பொது சிவில் சட்டத்தை   அனைத்து குடிமக்கள் மீது  திணிப்பதை இலக்காகக் கொண்டு எடுக்கும் நகர்வுகளை திரும்பப்பெறவேண்டும் என்றும் மத்திய அரசை  வலியறுத்தியது.

இந்திய அரசியலமைப்பின்  வழிகாட்டுதல் நெறிகளில்  மாநில அரசுக்கு அறிவுறுத்துவது என்னவெனில், பொது சிவில் சட்டமானது அடிப்படை உரிமையான மத சுதந்திரத்துக்கும்   பலதரப்பட்ட குழுக்கலால் அனுபவிக்கப்படும் தனியார் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.

மேலும், பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் மீது திணிப்பதினால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதமளித்துள்ள சிறுபான்மையினரின் மத மற்றும் மொழி கலாச்சார உரிமைகள் முற்றிலும் மீறப்படும். சட்ட ஆணையம் எடுத்த நடவடிக்கையால் இந்த வழக்கு தற்போது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு  முன்பு இருந்தாலும்,  சிறுபான்மையினருக்கு  தற்போதைய இந்திய அரசாங்கத்தின் நோக்கம் பெரிதும் கவலைகளை சேர்த்து வருகின்றது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்க்கு சம உரிமை மற்றும் பாலின நீதி தொடர்பான பிரச்சினைகள் ஒரு அடித்தளமாக எழுப்பப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனனில், இப்போதுள்ள  தனியார் சட்டங்கள் மூலமாகவே இப்பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

மேலும், பாப்புலர் ப்ரண்டின் மத்திய செயலக கூட்டத்தில் பொது சிவில் சட்டம் பொது மக்களின் உரிமைக்கு எதிராக இருப்பதினாலும், அதன் பெயரில்  அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வப்போது அதில் அதிகார வர்க்கம் தலையிட வாய்ப்பு உள்ளதாலும், பொது சிவில் சட்டம் சம்பந்தமாக உள்ள உட்கூறை அரசியலமைப்பில் இருந்து முழுமையாக நீக்க  வேண்டும் என்றும் அக்கூட்டத்தின்  வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று, ஐ.எஸ் அமைப்பின் சார்பாக தீவிரவாத செயல்களுக்காக சதித் திட்டம் தீட்டியதாக கேரளாவில் கனகமலை பகுதியில் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கின்றோம்  என்ற பெயரில் கேரளாவில் நடத்தப்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து கவலையை வெளிப்படுத்தியது பாப்புலர் ஃப்ரண்ட்.

பாப்புலர் ஃப்ரண்ட் உட்பட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஐ.எஸ் அமைப்பை நிராகரித்து  உள்ளதுடன்  அது குறித்தான விழிப்புணர்வுடன், அந்த இயக்கங்களின் சதி வலைகளில்  சிக்கி விடக்கூடாது என்றும் இளைஞர்களுக்கு தொடர்ந்து  எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

இந்த அனைத்து நிகழ்வுகளும் நீதியான முறையில் விசாரணை செய்யப்பட்டு  உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் அமையப்பெற வேண்டும்.

மேலும் இதற்கு முன்பு  பல வழக்குகளில் நடந்தது போன்று அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது. இது போன்ற நடவடிக்கைகளை முஸ்லிம் சமூகம், கல்வியாளர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் இயக்கங்களுக்கு எதிராக திருப்பிவிட்டு அவர்களை தனிமைப்படுத்த மதவாத சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. டாக்டர்  ஜாகிர்  நாயக்  மற்றும் அவரது நிறுவனங்கள்  இது போன்று தான் குறிவைக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோன்று கேரளாவில் முஸ்லிம் கல்வியாளர்கள் மீதும் கல்வி கூடம் மீதும்  எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கேரள  காவல்துறை மதவாத சிந்தனையுடன் செயல்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேசமயம், தொடர்ந்து  வெறுப்பு  பேச்சை  உமிழ்ந்து வரும்  இந்துத்துவ வாதிகள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டும் விஷக் கருத்துக்களை விதைத்து வரும் சங்க பரிவார கல்விக் கூடங்கள் தொடர்ந்து  செயல்பட்டும் வருவதை சுட்டிக்காட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் கேரளாவில்  ஆர் எஸ் எஸ்  மற்றும் சி பி எம் பரஸ்பரம் படுகொலைகளை செய்து வந்த போதிலும் யு ஏ பி ஏ சட்டம்  அவர்கள் மீது  பாயவில்லை.

ஆனால், முஸ்லிம்கள் விஷயத்தில் சாதாரண வழக்கில் கூட யு ஏ பி ஏ பிரிவு  124 ஏ பயன்படுத்தப்படுகின்றது என்பது கண்டனத்திற்குரியது. கேரள காவல்துறையை மதவாத சிந்தனையில் இருந்து சுத்தப்படுத்த வேண்டி குரல் கொடுக்க முன்வராத கேரள சிவில் சமூகத்தின்  மெளனம்  கவலைக்குரியது.

பயங்கரவாத சட்டங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  நிலைப்பாட்டை உறுதி செய்யும் விதமாக கனகமலை ஐ எஸ் வழக்கில் யு ஏ பி ஏ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதையும் முஸ்லிம் அறிஞருக்கு எதிரான புதிய வழக்கிற்கும் அதிருப்தி  தெரிவித்த  பாப்புலர் ஃப்ரண்ட், சிபிஎம் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசாங்கம் மற்றும் அதன் முதல்வர், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும்  கருவியாக மாறி வருவதை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பதிவு செய்தது தேசிய  தலைவர் கே.எம்.ஷரீப்  தலைமையில் நடந்த கூட்டம்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு