அதிகம் படிக்கப்பட்ட பதிவு

யூ.சி.சி க்கு எதிராக காயல்பட்டினத்தில் ஆலோசனை கூட்டம் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதன் முன் முயற்சியாக மத்திய சட்ட ஆணையம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தின் மீது பொது மக்களின் கருத்துக்களை தெரிவிக்க கோரியுள்ளது.  இதனை முற்றிலுமாக நிராகரிக்குமாறு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் முஸ்லிம் சமுதாயத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி கூட்ட அரங்கில் கல்லூரி நிறுவன தலைவர் அல்ஹாஜ் வாவு சா.செய்யிது அப்துல் ரஹ்மான் தலைமையில் 20.10.2016 வியாழன் காலை  நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான். (முன்னாள் எம்.பி.) விளக்க உரை ஆற்றினார்.

காயல் பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் ஹாஜி.எஸ்.ஓ.அபுல் ஹசன் கலாமி,வாவு எம்.எம்.சம்சுதீன் பாதுல் அஸ்ஹப் ஆலிம், எஸ்.ஏ. ஜவாஹிர் , எஸ்.ஏ.ஆர்.இஸ்ஹாக் , முத்து ஹாஜி மற்றும் அகில இந்திய மில்லி கவுன்சில் நிர்வாகி எஸ்.இப்னு சவுத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரமுகர்கள் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில் டாக்டர் எம்.கே.எம்.ஷாபி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு