பொது சிவில்சட்ட எதிர்ப்பை குறித்து தமிழ் மாநில இமாம்கள் பேரவையின் அவசரக்கூட்டம் இன்று 19 ஆலிம்களை கொண்டு சொல் முரசு அபூதாஹிர் பாகவீ ஹழ்ரத் தலைமையில் நடந்தது.
தீர்மானங்கள் :
1. மத உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக முஸ்லிம் தனியார் சட்டவாரியம் எடுக்கும் முயற்சிகளுக்கு (தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தீர்மானம் போல்) ஒத்துழைப்பது.
2.வரும் சனிக்கிழமை அன்று சேலம் கோட்டை ஸ்டோக்ஸ் ஹாலில் "பொது சிவில் சட்ட எதிர்ப்பு மகளிர் அரங்கம்" நடத்தி அதில் அனைத்து வகை மீடியாக்களையும் அழைத்து மகளிரே இஸ்லாம் பெண்களுக்கு எதிரானதல்ல என்பதை விளக்குவது எனவும்.
3. அதற்குமுன் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சேலம் முழுக்க எட்டு இடங்களில் பெண்கள் பயான் நடத்தி சட்டங்களையும், பிரச்சனைகளையும்எடுத்துரைப்பது எனவும்.
4. சேலத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் நமது தனியார்சட்டவாரியம் அமைத்துள்ள "கையெழுத்து இயக்கத்தை" வீடு வீடாகநடத்துவது நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
என தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்