அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பு

பொதுசிவில் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசின் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், மற்றும் இயக்க அமைப்புகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் விதமாக தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக இன்று 20-10-2016 பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் மெளலவி தெஹ்லான் பாகவி,
தமிழ்ஜநாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சென்னை மாவட்டத் தலைவர் மெளலவி தர்வேஸ் ரஷாதி, வெல்பேர் பார்டி ஆப் இந்தியாவின் தலைவர் எஸ். என். சிக்கந்தர் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்றைய மற்றும் நேற்றைய சந்திப்பில் திமுக மகளிர் அணி தலைவி கவிஞர் கனி மொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவ‌ன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு