திருவாரூரில் பிறந்த அமீருத்தீன் அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு தேசிய மாணவர் படையின் பொறுப்பாளராக செயல்பட்டு கேப்டன் அந்தஸ்து பெற்றார். பிறகு சவூதி அரேபியாவில் கிழக்கு மாகாணத்தில் அரம்கோ நிறுவனத்தில் பணியாற்றினார். தமுமுகவின் தொடக்கம் முதல் அதில் இணைந்து செயல்பட்டு அதன் கிழக்கு மண்டலத்தின் துணைத் தலைவராகவும் சேவையாற்றினார்.
சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட சமுதாய பணியாளர். மூத்த முன்னோடி, தமுமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர், தமுமுகவின் வளர்ச்சிக்காக வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும் லட்சக்கணக்கான ருபாய்களை திரட்டியும் தனது சொந்த பொருளாதாரங்களையும் கொடுத்தவர், எழுத்தாளர், சிந்தனையாளர்.
முதன் முதலாக தமுமுக நிகழ்ச்சிகளை பதிவுச் செய்வதற்காக ரூபாய் 50 ஆயிரம் செலவில் வீடியோ கேமரா இவரது முயற்சியால் 1997 வாக்கில் வாங்கி தரப்பட்டது.
2004 ஆகஸ்ட் மாதம் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சேவை ஆற்றினார்.
தமுமுகவில் இருந்து பிரிந்த மறுமலர்ச்சி தமுமுக துவக்கும் போது பல ஆலோசனைகள் வழங்கியவர் மார்ச் 30 2014 சென்னை சிங்கப்பூர் பிளாசாவில் மறுமலர்ச்சி தமுமுக துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மறுமலர்ச்சி தமுமுகவின் வெள்ளை கருப்பு வெள்ளை கொடியை அறிமுகப்படுத்தியவர், மறுமலர்ச்சி தமுமுக வளர்ச்சிக்காக பல முயற்சிகளையும் உதவிகளையும் செய்தவர், எங்களை அன்போடு அரவனைத்து எமது பணிகளை உற்சாகப்படுத்தியவர். அவர்கள் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், அமீருத்தீன் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளித்தது என தெரிவித்தார்.
மேலும், மறுமலர்ச்சி தமுமுகவில் பொதுச் செயலாளர் ரசூல்மைதீன் அவர்கள், அமீருத்தீன் அவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்