அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

வாணியம்பாடி அக் 17 : திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரி மைதானத்தில் கடந்த 7ம் தேதி மாணவிகளுக்கும்,14ம் தேதி மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்டோர் இறகு பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவர்கள் அல்பியா சதாத், முஹம்மத் அகரம் ஜைத், தல்ஹா பிராஸ் ஆகியோர் வெற்றிபெற்றனர்.இரட்டையர் பிரிவில் அல்பியா சதாத், எழில் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இதே போல் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவிகள் பூஜா லக்ஷ்மி, சிந்துஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மேஜை பந்து போட்டியிலும் 17 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் பிரிய தர்ஷினி, சௌமியா ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மண்டல போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செந்தில் குமார், முதல்வர் பிங்கி ரோஹித், அட்மின் கவிதா, விளையாட்டு இயக்குனர் ராமு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு