‘உணர்வு’ (07-13/10/2016) தேதியிட்ட இதழ் பக்கம் 17லில் ‘சாயம் வெளுத்தது; முஸ்லிம் லீம் வேடம் கலைந்தது! என்ற ஒரு செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது உண்மைக்கு புறம்பான தவறான செய்தியாகும்.
எனது கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பண்பொழி பேரூராட்சியில் உள்ள மலைப்பகுதி இயற்கை வளத்துடன் பசுமை நிறைந்த சுற்றுலா தளமாகும். அப்பகுதியிலேயே திருமலைக்கோவில் அமைந்துள்ளது. அங்கு சுற்றுலாவுக்கு செல்பவர்களும், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மலைக்கு செல்ல மின் விளக்குகள் ஏற்படுத்தி தர என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதின் பேரில் நம் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு சுற்றுலாத்துறை சார்பில் மலை பாதையில் மின் விளக்குகள் அமைக்க ரூ. 53.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.
இப்பணிகளுக்கான துவங்க விழாவிற்கு அதிகாரிகள் அழைப்பின் பேரில் சென்றேன். அங்கு சென்ற என்னிடம் அதிகாரிகள் ரூ. 53.50 லட்சத்திற்கான மின்விளக்கு அமைக்கும் விவரத்தை தந்தனர். இப்பணிகள் துவக்க விழா மலை பாதையில் சாலை ஓரத்தில் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற இந்து மத சம்பிரதாய-சடங்குகளின் அமைச்சர் சட்டமன்ற-பாராளுமன்ற-பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த என்னிடம் ஒரு செங்கல்லை கொடுத்து விட்டு திரும்பி வாங்கி கொண்டனர்.
அதன் பின் அங்கிருந்தவர்கள் மலை உச்சியில் இருக்கும் திருமலை கோவிலுக்கு சென்றனர். நான் முஸ்லிம் லீக் கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சென்று விட்டேன்.
இதிலே இஸ்லாத்திற்கு முரணாக நான் எதையாவது செய்திருக்கின்றேனா என்று யாராவது நிரூபிக்க முடியுமா?
உணர்வு பத்திரிகையில் இந்த செய்தியை அளித்தவரின் பெயர் வெளியிடாதது மர்மம் என்ன?
எனது சட்டமன்ற நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்.
நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒப்பிட்டு பேசியபோது நான் தெரிவித்த கடும் கண்டனம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு சிலை வைப்பதற்கு எதிர்ப்பு மற்றும் எனது சட்டமன்ற பேச்சுகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இடம் பெற்று தலைமை செயலக நூலகத்தில் உள்ளது.
அதை படித்தால் நான் அதிமுக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றிருப்பதும் தெரியும்.
ஒரு குற்றச்சாட்டை பிரசுரம் செய்யும் முன் உரியவரிடம் கருத்து கேட்டிருக்கலாம். முஸ்லிம் லீகை பற்றியும், அதன்தலைவர்கள், ஊழியர்கள் பற்றியும் அவ்வப்போது தவறான செய்திகள் மூலம் விமர்சிப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை பற்றிய தவறான செய்திகளுக்கு பல முறை விளக்கம் சொல்லப்பட்டு விட்டது. ஒரு செய்தியை திரும்ப-திரும்ப சொல்லி வருவதாலும், குற்றம் குறைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதால் சமுதாயத்திற்கு எந்த நன்மையும் இல்லை.
வரும் காலங்களிலாவது சமுதாயத்தின் கண்ணியத்தை பாதுகாத்திடும் வகையில் ஒரு குற்றச்சாட்டை சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்தை கேட்டறிவது சிறந்த பண்பாடாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்