அதிகம் படிக்கப்பட்ட பதிவு

பஹாரிச் கலவரம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு எஸ்டிபிஐ தேசிய தலைவர்கள் நேரில் ஆறுதல்

உ.பி. மாநிலம் பஹாரிச்சில் துர்கா பூஜையின் ஊர்வலத்தின் போது, கும்கான் மற்றும் மேதிலாபுர்வா ஆகிய கிராமங்களை வன்முறை கும்பல் சூறையாடியது. வீடுகளை தீயிட்டு கொளுத்தியும், பள்ளிவாசலை தாக்கியும் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்த திடீர் கலவர தாக்குதலில் 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் 41 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத், தேசிய துணைத் தலைவர் அட்வகேட் சர்புதீன், தேசிய பொதுச் செயலாளார் முகமது ஷாபி ஆகியோர் அடங்கிய குழு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள அந்த கிராம மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், தீயில் முற்றிலும் எரிந்த அனைத்து வீடுகளையும் உடனடியாக அரசு கட்டித்தரவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் தீவிரவாத செயலுக்கு இணையான  வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட  குண்டர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு