மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை சிறுபான்மை சமுதாயத்தின் ஐயங்களைப போக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டியராஜன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம் எல் ஏ நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மத்திய பாஜக மோடி அரசு முன் மொழிந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு குறிப்பில் மாநில சுய ஆட்சி, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் , மதச்சார்பற்ற தன்மை குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் நிலவி வருகின்றன.
பா ஜ க கல்விக் கொள்கை காவிக் கொள்கையாக இருக்கிறது என்பதே பல்வேறு அரசியல் கட்சிகளும் , சமூக அமைப்புக்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள் .
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 25-10-2016 அன்று டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இன்று (20-10-2016) மாலை 5-௦௦ மணியளவில் தலைமை செயலகத்தில் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் நேரில் சந்தித்தார்.
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பாதிக்காத வகையில் சமய சார்பற்ற கொள்கை நிலைத்திருக்கக்கூடிய வகையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உரிய திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அனைத்து சிறுபான்மைக் கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இக்கருத்தையே வலியுறுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
அதனை கவனத்துடன் கேட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா. பா. பாண்டிய ராஜன் அவர்கள்
உங்களின் கருத்துகளுக்கு தமிழக அரசு உரிய மதிப்பளிக்கும் என்பதை கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் எம். எல். ஏ. அவர்களிடம் உறுதியளித்தார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்