தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இன்று (07-10-2016) உச்சநீதிமன்ற உத்தரவை புறக்கணித்து, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யும்மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்து, தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தலைமையேற்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: தலைமைச் செயலாளர் கவரனரை சந்தித்து இருக்கிறார். எனவே துணை முதல்வர் ஒருவர் பொறுப்பேற்கும் வாய்ப்பு இருக்கிறதா?
இதுபோன்ற பலவிதமான செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதையெல்லாம் வைத்துக் கொண்டு அரசியல் செய்ய நான் விரும்பவில்லை.
முதலமைச்சரை பொறுத்தவரையில் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தொடக்கத்தில் சாதாரணமாக சொல்லிக் கொண்டு இருந்தார்கள். நேற்றைக்கு வந்திருக்கக் கூடிய மருத்துவ அறிக்கையை பார்த்தீர்கள் என்றால், ஒரு பெரிய சிகிச்சை செய்ய வேண்டும், நீண்ட நாள் மருத்துவமனையில்தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் இருப்பதை பார்க்கும் போது நமக்கும் ஒரு ஐயம் ஏற்படுகிறது.
ஆகவே, என்னைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் குணமடைந்து வர வேண்டும் என்பது தான் எண்ணம். தலைவர் கலைஞர் அவர்களுக்கும் அது தான் எண்ணம். திமுகவின் உணர்வும் அதுதான். அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஆனால், அவர் வரும் வரை ஒரு தற்காலிக முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய அமைச்சர்களோ அந்த பொறுப்பேற்றுக் கொண்டு, இப்போது இருக்கக் கூடிய, முக்கியமாக காவேரி பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு முடிவுகளை காண வேண்டிய நிலை இருக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலை.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்