அதிகம் படிக்கப்பட்ட பதிவு

முதல்வர் நலமுடன் உள்ளார் எம்.தமிமுன் அன்சாரி பேட்டி

இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக முதல்அமைச்சர்  அம்மா அவர்களை நலம் விசாரிப்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தலைமையில் மஜக தலைவர்கள் ஹாரூண் ரஷீது, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நாச்சிக்குளம் தாஜுதீன், தைமிய்யா, சாதிக் பாஷா, அணீஸ் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாலை 7 மணிக்கு வருகை தந்தனர்.

மருத்துவமனையில் அமைச்சர் O.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தப் பிறகு, வெளியே பத்திரிகையாளர்களை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி  அவர்கள் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது கூறியதாவது...

முதல்வர் அம்மா அவர்களின் உடல்நிலை முன்பைவிட சிறப்பாக இருக்கிறது என அமைச்சர் அண்ணன் O.பன்னீர் செல்வம் அவர்கள் கூறினார்கள். நாளுக்குநாள் அவர்கள் உடல்நிலை தேறி வருவதால் விரைவில் அவர்கள் இல்லம் திரும்பி வழக்கமான பணிகளை உற்சாகமாக மேற்கொள்வார். அந்த மகிழ்ச்சியான நாள் விரைவில் வரும்.

இவ்வாறு பொதுச்செயலாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு