அதிகம் படிக்கப்பட்ட பதிவு

உலகக் கோப்பை கபடி; இங்கிலாந்தை வீழத்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி








ஆமதாபாத்:

உலகக் கோப்பை கபடி போட்டியில் இங்கிலாந்தை 69-18 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3வது உலககோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது.
தென்கொரியா, வங்காள தேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏ பிரிவில் நடைபெற்ற இந்த கடைசி லீக் ஆட்டத்தில்
தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இங்கிலாந்தை 69-18 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வீழ்த்தியது இந்தியா.
20 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு