விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர், தொல். திருமாவளவன் குறித்து சமீப காலமாக தேவையற்ற வதந்திகள் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இது குறித்து முஸ்லிம்
சமூகமும் மதசார்பற்ற சக்திகளும் கவலை கொண்டுள்ளாதகவும்
அத்தகவல்கள் உலா வருகின்றன.
அதுதான் பாஜக பொன்,ராதாகிருஷ்னன்
அழையா விருந்தாளி போல சென்று திருமா அவர்களை சந்தித்தது.
பொதுவாகவே எவரிடமும் கடுமைகாட்டத்தெரியா இயல்பு கொண்ட தோழர்,திருமா அவர்கள்
வந்தவரை வரவேற்று புன்னகைத்துள்ளார்
என்றே அவரைப்பற்றி நன்கறிந்தவர்களின் கூற்று
பொதுவாகவே பாஜக எனும் ஆக்டோபஸ் யாரையும் வலைத்துப்போடத்தான் கருதும் அதில் திருமா சிக்குவாரா? என்றால்
சிக்கமாட்டார் என்றே நம்பலாம் காரணம் திருமாவின் இயல்பே இந்துத்துவா எதிர்ப்புதான் பணத்திற்கும்,பதவிக்கும் கொள்கையை அடகு வைக்க மாட்டார் என்பது நமது திடமான எண்ணம்.
எனவே ஒரு சந்திப்பே
ஒரு கொள்கைவாதியை
மாற்றிவிடும் என கருதுவதே அறியாமையின் உச்சம்
மற்ற தலைவர்களைப் போல திருமாவை
எடைபோடுவது என்பது ஏற்புடையது அல்ல என்பதோடு அவர் குறித்து அவரே அடிக்கடி கூரும் வார்த்தையே மீண்டும் நினைவு படுத்துகிறேன் பாஜக விரிக்கும் வலையில் விழுந்துவிட நாங்கள் ஒன்றும் சிறுநரிக்கூட்மல்ல சிறுத்தைகள் கூட்டம் என்று பலமுறை கூறியது குறிப்பிடத்தக்கது.
எனவே வதந்திகளை நம்பவோ,பரப்பவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் அ.ச.உமர் பாரூக் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்