கடந்த ஆண்டு முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி திடலில் ஷரியத் விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி வழங்கியது.
பொதுக்கூட்டத்திற்கும் முதல் நாள் திடீரென்று காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முத்துப்பேட்டை அனைத்து ஜமாத்தினர்ரகளையும், தமுமுக,மமக மற்றும் எஸ்டிபிஐ கட்சினர்களை அனுகினார்கள். அதன் அடிப்படையில் ஆலோசனைக் கூட்டம் தெற்குதெரு அரபிசாகிப் பள்ளிவாசலில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு ஷரியத் விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து முத்துப்பேட்டை காவல்துறை முத்துப்பேட்டை அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள், தமுமுக நகர செயலாளர் சம்சூதின் மற்றும் எஸ்டிபிஐ கட்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மச்சான் என்கின்ற அபுபக்கர் சித்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கினை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் முத்துப்பேட்டை தீன் மற்றும் மூத்த வழக்கறிஞர் செல்வரெத்தினம் அவர்களும் ஆஜராகி வழக்கு நடத்திவந்தோம் மேற்படி வழக்கில் இன்று அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்