அதிகம் படிக்கப்பட்ட பதிவு

சிறைவாசிகளுக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி MLA


கோவையில் மரணமடைந்த சிறைவாசி ஓஜீர் அவர்களின் ஜனாஸா அடக்கத்திற்கு பிறகு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், SDPI தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் JAQH, PFI, சுன்னத்ஜமாத் கூட்டமைப்பு, INTJ, கோவை ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்களும் உரையாற்றினார்கள்.

பிறகு மஜக பொதுச்செயலாளர்                         
M.தமிமுன் அன்சாரி,
துணை பொதுச்செயலாளர் ஈரோடு பாரூக், மாநில செயலாளர் கோவை.சுல்தான், மாநில துணை செயலாளர் கோவை. பஷீர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கொண்ட
"உண்மை அறியும் குழு" கோவை சிறைக்கு விரைந்தது.

அனுமதி பெற்று உள்ளே சென்று பாஷா பாய், அன்சாரி, நவாஸ்கான், தாஜுதீன் உள்ளிட்ட சிறைவாசிகளை சந்தித்து சிறையில் நடந்தது என்ன? என விசாரித்தனர்.

சிறையில் நெஞ்சு வலி உள்ளிட்ட உயிராபத்து நோய்களுக்கு தகுதிவாய்ந்த மருத்துவர்களும், மருந்துகளும் இல்லை என்றும், அதனால்தான் ஓஜீர் அவர்களின் மரணம் நிகழ்ந்தது என்றும் கூறினார்கள்.

கடந்த 10 நாட்களாக அவர் நெஞ்சுவலியால் துடித்தப்போது சிறை அதிகாரிகள் அவருக்கு துணை நின்றதாகவும், அவர்கள் ஓஜீரை சிறைக்கு வெளியே சிகிச்சைக்கு அனுப்பியபோது, வெளியே உளவுத்துறையை சேர்ந்த சிலர் கொடுத்த தவறான தகவலினால், அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதை காரணம் காட்டி நெஞ்சுவலிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறினர்.

குறிப்பிட்ட கைதிகளுக்கு கோவை சிறையில் தொடர்ந்து பாராபட்சம் காட்டப்படுவதால் தாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினர்.
இது பலரின் உடல் நிலைகளை பாதித்து வருவதாகவும் கூறினர்.

எனவே கோவை சிறைவாசிகளின் பரிதாப நிலை குறித்து அரசுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்றும், நோயாளி கைதிகளுக்கு சிறைக்கு வெளியே உயர்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

சிறைவாசிகளை நேரில் வந்து சந்தித்து உண்மைகளை கேட்டறிந்ததற்காகவும், ஆறுதல் கூறியதற்க்காகவும் தங்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

மேலும் சட்டமன்றத்தில் தங்களுக்காக குரல் கொடுத்ததற்காக பொதுச்செயலாளருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

விடைபெறும்போது பலரும் கண்கலங்கினர், சட்ட ரீதியான உதவிகளை செய்யுமாறும் வேண்டினர்.

அதன்பிறகு அதிகாரிகளிடம் சிறைவாசிகளின் ஆதங்கங்களை மஜக தலைவர்கள் எடுத்து கூறினர். சட்டம் அவர்களுக்கு அளிக்கும் உரிமைகளை கொடுக்க வேண்டும் என்றும், மனிதாபிமானத்தோடு அவர்களை  சட்டப்படி நடத்த வேண்டும் என்றும் கூறினர்.

பிறகு சிறைக்கு வெளியே திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை பொதுச்செயலாளர் சந்தித்தார்.

அப்போது வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும், சிறைக்கைதிகள் கூறிய கருத்துகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார்.

சிறைக்கு வெளியே கோவை மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளில் சிறைவாசிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஒரே சட்டமன்ற உறுப்பினர் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மட்டுமே என்று கோவை மக்கள் நெகிழ்வுடன் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு