500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பழைய நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களில் மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று வங்கிகள் நாடு முழுவதும் விடுமுறை விடப்பட்டிருந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு ஏ.டி.எம் இயந்திரமும் இயங்காது எனவும் அறிவிக்கபட்டிருந்தது. நேற்றைய விடுமுறையைத் தொடர்ந்து, பணம் மாற்றுபவர்களும், வழக்கமாக வங்கிகளில் பணபரிவர்த்தனை செய்யும் நுகர்வோரும் என அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சலசலப்புகள் ஏற்படாதிருக்கவும் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகளில் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தினால் போக்குவரத்து மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பிரதான சாலைகளில் இருக்கும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், அந்த வழியாக செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் கூட்ட நெரிசலிலும், மக்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களிலும் சிக்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலைகள் பெரிதும் குறைந்துள்ளது. பொருட்கள் மலிவாக விற்கப்படும் போதிலும், வாங்குவதற்கு பணம் இருந்தும், செல்லாக்காசு போல் வைத்து வாங்க முடியாமல் அதிக பொருட்கள் வீணாவதாக வியாபாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி ரூபாய் நோட்டுகளை திடீரென்று தடை செய்துள்ளது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
படங்கள் இணைப்பு: [பரங்கிப்பேட்டை கிளை] இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் போக்குவரத்து நெரிசல் (பரங்கிப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில்)




கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்