தேசிய மாணவர் இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க தினமான நவம்பர் 7 இந்தியா முழுதும் கேம்பஸ் தினமாக கொண்டாடி வருகிறது.
இது தொடர்பாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் தோழர். முஸ்தபா B.E.,வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது 'மாணவ பேரியக்கமாம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினுடைய 8 ஆம் ஆண்டு துவக்க தின வாழ்த்துக்களை உளமார தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய தேசத்தினுடைய வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று!! ஆனால் அத்தகைய மாணவர்கள் இந்த பாசிச சங்கபரிவார ஆட்சியில் நாளொரு மேனியாகவும் பொழுதொரு வண்ணமாகவும் வஞ்சிக்கப்படுவதையும் தாக்கப்படுவதையும் பார்க்கும்போது தேசத்திற்கு தலைகுனிவாக உள்ளது.
எனவே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க தினமான இன்று மாணவ எழுச்சி தினம் என்ற சுபச்செய்தியை நெஞ்சில் ஏற்று மாணவர்களுடைய பாதுகாப்பிற்காகவும் உரிமைகளுக்காகவும் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் என்றென்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் , கல்வி திட்டங்கள் வாயிலாகவும் நீதிக்கான போராட்டங்கள் வாயிலாகவும் எங்களுடைய பணிகள் மென்மேலும் வீரியமடையும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறினார்.
மேலும், கேம்பஸ் தினத்தை முன்னிட்டு கேம்பஸ் ஃப்ரண்ட் குமரி சார்பாக (07.11.2016) அன்று கொடியேற்று நிகழ்ச்சி , மேற்ப்படிப்பு வழிகாட்டி & இலக்கு நிர்னயித்தல் முகாம் நடைபெற்றது.
கொடியேற்று நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்ட் குமரி மாவட்ட தலைவர் எஸ்.ஜாஸிம் அஹமது B.E தலைமையில் திருவிதான்கோடு முஸ்லிம் கலை கல்லூரி முன்பும் திருவிதான்கோடு அரசு மேல்னிலை பள்ளி முன்பும் நடைபெற்றது.கேம்பஸ் ஃப்ரண்ட் குமரி மாவட்ட பொது செயலாளர் எஸ். அஹமது ஃபயாஸ் கொடியேற்றினார். SDPI கட்சியின் தக்கலை நகர தலைவர் ஜஹபர் அலி அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திரளாக
மாணவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். முஸ்லிம் கலை கல்லூரி முதல்வர் பேரா.தர்மராஜ் அவர்களைசந்தித்து கேம்பஸ் ஃப்ரண்டின் பணிகளை எடுத்துகூறினோம்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அக்சஸ் இந்தியா என்ற கல்வி சேவை நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான இலவச மேறப்படிப்பு வழிகாட்டி & இலக்கு நிர்னயித்தல் முகாம் திருவிதான்கோடு அரசு மேல்னிலை பள்ளியில் நடைபெற்றது . பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. அன்லெட் ஷீலா M.A, B.Ed அவர்கள் தலைமையேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர் திரு.ஜேம்ஸ் செல்வராஜ் M.A,B.Ed,M.Phil., மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் குமரி மாவட்ட தலைவர் எம்.ஷேக் நூருத்தீன் முன்னிலை வகித்தனர்.
அக்சஸ் இந்தியா வின் பயிற்றுனர் திரு.ஃபிர்தவ்ஸ் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். கேம்பஸ் ஃப்ரண்டின் குமரி மாவட்ட பொது செயலாளர் எஸ்.அஹமது ஃபயாஸ் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார். கேம்பஸ் ஃப்ரண்ட் குமரி மாவட்ட தலைவர் எஸ்.ஜாஸிம் அஹமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில்189 மாணவ மாணவியர்கள் பயனடைந்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்