அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இனி டெல்டா மாவட்டங்களில் 'மீத்தேன்' எடுக்கப்படாது" - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

விவசாயிகளின் நலன்கருதி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்‍கும் திட்டத்தை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்‍கும் மீத்தேன் எரிவாயு எடுக்‍கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், முந்தை தி.மு.க. ஆட்சியில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டு வந்த மீத்தேன் எரிவாயு திட்டம் டெல்டா மாவட்ட விளைநிலங்களை பாலைவனமாக்‍கும் என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்றுக்‍கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, விவசாயிகளையும், வேளாண்மையையும் காப்பாற்றும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தக்‍கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்.

முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்‍கையும் எடுக்‍காத நிலையில், தற்போதைய மத்திய அரசிடமும் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதங்கள் மூலமாகவும், பிரதமரிடம் நேரில் மனு அளித்தும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்‍கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு