கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் கடந்த சில வாரங்களுக்கு முன் முகநூலில் ஆறுமுகம் என்பவர் இஸ்லாமியர்களையும் முஸ்லிம் பெண்களையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தகாத வார்த்தைகளை உபயோகித்து இந்து முஸ்லிம் களின் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதை ஊர் மக்கள் காவல் துறை கவனத்திற்கு எடுத்து சென்று முறையிட்டனர. கலவரம் தூண்டும் வகையில் ஆறுமுகத்தின் பதிவு இருந்ததையடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.
தற்பொழுது ஜாமீனில் வெளி வந்துள்ள ஆறுமுகம் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் தீ வைக்கப்பட்டதாக நாடகமாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து லால்பேட்டை தெற்கு தெருவை சார்ந்த முஹம்மது யஹ்யாவின் மகன் மசூது அஹமது (25) என்பவர் எந்தவித விசாரணையும் இன்றி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மசூது அஹமது வை விடுவிக்க கோரி லால்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மற்ற சமுதாயத்தினருடன் ஊரே திரண்டு கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி வலியுறுத்தினர்.
இந்நிலையில் லால்பேட்டை அருகில் கட்சி நகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ம ம க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமதும் சம்பவ இடத்துக்கு வந்து லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசித்ததார்.
மேலும், போஸ்ட்டாபீஸ் அருகில் வசந்த பவன் வாசலில் சங்கமித்தனர். கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்து பதினைந்து நாட்கள் எங்களை உள்ளே வைத்துக் கொள்ளுங்கள் என்று முழங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு தக்பீரை ஆரம்பித்தனர். கைது செய்ய வேண்டிய போலீஸ் எங்களை வழி நடத்தி அழைத்துச் சென்றது. குவியலாக வந்த எங்களை ஒழுங்கு படுத்தி பேரணியாக மாற்றி வரவேற்று அழைத்துச் சென்றனர். பழைய கலக்டர் அலுவலகம் எதிரில் எங்களை நிறுத்தி சிலர் மட்டும் எஸ்பியை சந்திக்க வாருங்கள் என்று அழைத்தனர். பொ.செ அப்துஸ் சமது வேண்டுகோளுக்கு இனங்க மக்கள் திரளை எனது கண்ட்ரோலில் எடுத்துக் கொண்டு சிலரை அனுப்பி வைத்தனர்.
உள்ளே சென்றவர்களை வரவேற்று பேசிய எஸ்பி அவர்கள் ஒரேஒருவருக்காக நேற்று மதியம் முதல் இந்த நேரம் வரையும் இப்படி நடந்து கொள்கிறீர்களே ஏன் என வினவினார். அதற்கு பொதுச்செயலாளர் ஆணித்தரமாக பதில் சொன்னார். ஆம் எங்கள் ஒரு சகோதரனுக்கு ஒரு அநீதி என்றாலும் நாங்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்கும் கூட்டமல்ல. மேலும் இந்த போராட்டம் மசூதுக்காக மட்டுமல்ல. இதுபோன்று இனி இம் மாவட்டத்திலோ அல்லது தமிழகத்திலோ எந்த ஒரு முஸ்லிமின் மீதும் பொய் வழக்கு போடக்கூடாது என எச்சரிக்கவே வந்திருக்கிறோம் என்றார். தொடர்ந்து மசூத் விடுதலை குறித்தும் மாவட்ட இதர சில பகுதிகளில் உள்ள காவி தீவிரவாதிகள் குறித்தும் சமூக நல்லிணக்கம் லால்பேட்டை மக்களுக்கான பாதுகாப்பு என பல அம்சங்கள் குறித்து பேசி சுமுக உடன்படிக்கை ஏற்பட்டு இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு போராட்டத்தை நிறைவு செய்தனர்.
செய்தி அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.அபூபக்கர் எம்.எல்.ஏ சென்னை டி .ஜி .பி.அலுவலகத்தில் உளவுத்துறை டி ஐ.ஜி திரு ஈஸ்வர மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து பொய் வழக்கில் கைது செய்யப்பட இளைஞரை விடுவிக்க கூறியதுடன் அமைதி ஏற்படுத்தித்தர கேட்டுக் கொண்டார்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்