அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மாநில செயற்குழுவில் அரசியல் பாடம் எடுத்த திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபாண்மை துறை மாநில செயற்குழு கூட்டம்  காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறுபாண்மை பிரிவின் மாநில தலைவர் வழக்கறிஞர்.அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார்.

சிறுபாண்மை பிரிவின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர்.சு.திருநாவுக்கரசர் ,சிறுபாண்மை பிரிவு தெண்மண்டல பொறுப்பாளர்.முஹமது மஸ்தான் அலி,முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு,அகில இந்திய செயலாளர் டாக்டர்.செல்லக்குமார் ,செய்தி தொடர்பாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்எஸ்எஸ்-பாஜக வை ஒழித்துக் கட்ட வேண்டும்-!

ஆர்எஸ்எஸ் ஸும் பாஜக வும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மதநல்லிணக்கத்தையும் சீர்குலைத்து வருவதாகவும் ,ஆர்எஸ்எஸ் ஸின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும்,ஆர்எஸ்எஸ் மதவாத அமைப்பை கடுமையாக எதிர்க்கும் ராகுல் காந்தி அவர்களை இந்த நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்று பேசினார்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தலித் மக்களும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ,

பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய பாஜக மோடி அரசை வண்மையாக கண்டிப்பதாகவும், சிறுபாண்மை சமூகத்தை அடக்கி ஆள  நினைக்கும் பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுவதாகவும் தனது உரையில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டார்.

தங்கபாலு பேச்சு:

சிறுபாண்மை முஸ்லீம் சமூகத்தை அடக்கி ஆள நினைத்தால் காங்கிரஸ் காரர்களின் கைகள் பூப்பறித்து கொண்டிருக்காது என பாஜக வை எச்சரித்தார்.

டாக்டர் செல்லக்குமார்:

தமிழக இஸ்லாமியர்களிடம் உள்ள எழுச்சியைப் போல் நான் பிற மாநில முஸ்லீம்களிடம் கண்டதில்லை என்று பேசினார்.

தெலுங்கில் பேசிய மஸ்தான் அலி:

மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் இயக்க பாகுபாடின்றி ஒன்றினைய வேண்டும் என பேசினார்.

இதாயத்துல்லா:

பாஜக வை வீட்டிற்கு அனுப்பும் தேதியை தமிழக இஸ்லாமியர்கள் தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அஸ்லம் பாஷா:

சமுகத்தை மேம்படுத்த ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அதற்கான அமைப்பு  பாலமாய் காங்கிரஸ் கட்சி என்றென்றும் திகழும் என பேசினார்.

மேலும்  இஸ்லாமிய இளைஞர்களும் கிறிஸ்தவ இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வு பெறும் வகையில் விரைவில் தமிழகம் முழுவதும் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சிகளை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவில் சிறப்பான முறையில் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு கேடயங்களை வழங்கி கவுரவித்தார் மரியாதைக்குரிய  திருநாவுக்கரசர்.

தனது உரையை துவங்கும் முன் அனைத்து நிர்வாகிகளுடனும் கலந்துரையாடலை நடத்தினார் திருநாவுக்கரசர்.

மக்களை எவ்வாறு சந்திப்பது?,மக்கள் பணி எவ்வாறு செய்வது?,உள்ளாட்சி என்றால் என்ன? நகராட்சி என்றால் என்ன?மாவட்ட ஊராட்சி பதவி என்றால் என்ன? ஒன்றிய தலைவர் பதவி என்றால் என்ன?

கிராமப் பஞ்சாயத்து என்றால் என்ன?

போன்ற பல்வேறு கேள்விகளை ஒரு கல்லூரி பேராசிரியரைப் போன்று  அரசியல் பாடம் நடத்தினார்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு