கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 10-11-16 அன்று பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மசூத் அகமதுவை விடுதலை செய்ய காவல் துறை ஒப்புக்கொண்டது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள்கிழமை விடுதலை செய்யப்படுவார்.
நேற்றைய நடந்த முற்றுகைப் போர் ஒரு மசூத் விவகாரத்திற்கு மட்டுமல்ல, அவரைத்தொடர்ந்து தமுமுக, முஸ்லிம் லீக், எஸ்டிபி, மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் 16 பேர் மீது வழக்கு உள்ளது.
நேற்றைய போராட்டத்தால் இந்த அத்தனை பேர் மீதான வழக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
பொய் வழக்கில் இனி ஒருவர் மீது வழக்கு போட முனைந்தாலும் கடலூர் மாவட்டம் என்ன ஆகும் என்ற செய்தியை அரசுக்கும் காவல் துறைக்கும் புரிய வைத்துள்ளனர்.
இம்மாவட்டத்தில் பல ஊர்களில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ரவுடிகளையும், சட்ட விரோத கும்பல்களையும் காவல்துறைக்கு எடுத்துக்காட்டி நடவடிக்கை கோரினர்.
லால்பேட்டை, மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை மற்றும் முஸ்லிம்கள் வாழுமிடங்களில் மதக்கலவரம் தூண்டும் முயற்சி நடைபெறா வகையில் முன்னெச்சரிக்கை செய்தனர்.
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்